(க-து.) கற்றார்க்கும் எவ்வூருந்தம்மூர்; தவத்தோர்க்கும் எவ்வூருந் தம்மூர்; கீழ்மக்கட்கும் எவ்வூருந் தம்மூர்;தங்கையிற் பொருளுடையார்க்கும் எவ்வூருந் தம்மூர். (வி-ரை.) நல்லார், மிக்கவர்; ஆவது கல்வி மிக்காரென்பது. ஊரில்லை யென்றது, எவ்வூரும் அவர்க்குத் தம்மூராகப் பயன்படுமென்றது. கடை : பண்பாகு பெயர் கையகத்து என்பது கைத்தென நின்றது. கற்றோரையும் தவத்தோரையும் எவரும் வழிபட்டு ஓம்புவாராதலினாலும், பொருளுடையான் தனது பொருளால் யாண்டும் எதையும் பெறவல்லானாதலினாலும்,கீழ்மக்கட்குத் தம்மூரின் கண்ணும் மதிப்பின்மையானும்இவர்கட்கு எவ்வூருந் தம்மூராயிற்று. (84) 85. கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம் மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம் அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே 1இல்லத்துத் தீங்கொழுகு வாள். (இ-ள்.) கல்லா ஒருவர்க்கு - கல்வியறிவில்லாத ஒருவருக்கு, தம் வாயின் சொல்- தமது வாயிலிருந்து வரும் சொல்லே, கூற்றம் -கூற்றுவனாகும்; மெல் இலை - மெல்லிய இலைகளையுடைய, வாழைக்கு - வாழை மரத்துக்கு, தான் ஈன்ற காய் - தான் வெளிவிட்ட குலையே, கூற்றம் - கூற்றுவனாகும்; அல்லவை செய்வார்க்கு - தீயவை செய்யும் மக்கட்கு, அறம் கூற்றம் - அறக்கடவுளே கூற்றுவனாம்; இல்லத்து - வீட்டிலிருந்து கொண்டு, தீங்கு ஒழுகுவாள் - கற்புக் கேடாக மறைவாகயொழுகும் மனைவி, கூற்றமே - தன்னைக் கொண்ட கணவனுக்குக் கூற்றுவனே யாவாள். (க-து.) கல்வியறிவில்லாதவர்களுக்கு அவர் வாயிற் பிறங்கும் சொல்லே அவர்களுக்குக் கூற்றுவனாம்; வாழை மரத்துக்கு அஃதீனும் குலையே கூற்றுவனாம்; தீயவை செய்வார்க்கு அறக்கடவுளே கூற்றுவனாம்;இல்லத்திலிருந்து கொண்டு மறைவாய்க் கற்புக்கெடுபவள் கொண்டானுக்குக் கூற்றுவனேயாவாள், (வி-ரை.) கல்லாப் பேதையர் பொய் குறளை முதலிய பொருத்தமில்லனவே பேசுவ ராதலால் அவையே அவர்க்குக் குற்றந் தரும். அல்லவை செய்தார்க்கு அறங் கூற்றமாதல்,‘அல்
(பாடம்) 1 இல்லிருந்து.
|