பக்கம் எண் :

77

லவை செய்தார்க் கறங் கூற்றமா மென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே' (வழக்குரைகாதைவெண்பா) என்று சிலப்பதிகாரத்திலும் ஆசிரியர் இள்ங்கோவடிகள் கூறுதலாலும் அறியப்படும். அறமென்னும் தன்மையே கூற்றுவனாய் வந்து வருத்துமென்பது கருத்து. ஏனையோரெல்லாம் ஒருகாற்றிருந்தி நன்மை செய்தலுங் கூடுமாதல்போலக் கற்புக்கெட்ட பெண்டிர் ஆகாராதலின் ‘கூற்றமே'யென்று தேற்றேகாரங் கொடுத்தோதப்பட்டது.

(85)

 86. நீரான்வீ றெய்தும்விளைநிலம் நீர்வழங்கும்
பண்டத்தாற் பாடெய்தும் பட்டினம் - கொண்டாளும்
நாட்டான்வீ றெய்துவர் மன்னவர் கூத்தொருவன்
1ஆடலாற் பாடு பெறும்.

(இ-ள்.) நீரான் - தண்ணீரின் பாய்ச்சலால், விளை நிலம் - பயிர் விளையும் நிலம், வீறு எய்தும் - செழிப்படையும்; நீர் வழங்கும் - கடல் கொடுக்கும், பண்டத்தால் - முத்து முதலிய பொருள்களால், பட்டினம் - நகரம், பாடு எய்தும் - பெருமை பெறும்; கொண்டு - தங்கீழ்க் கைப்பற்றி, ஆளும் - அரசாளும், நாட்டான் - நாட்டினால், மன்னவர் - அரசர், வீறு எய்துவர் - சிறப்படைவர்; ஒருவன் - வல்லானொருவன், ஆடலால் - ஆடுதலால், கூத்து - நாடகம், பாடு பெறும் -மேன்மையடையும்.

(க-து.) விளைநிலம் நீர்ப்பாய்ச்சலாற் செழிப்படையும்: பட்டினங்கள் கடல்வளத்தாற் பெருமையுறும்; மன்னர் தம் ஆளும் நாட்டினாற் சிறப்படைவர்;கூத்து வல்லானொருவன் ஆடலால் மேம்படும்.

(வி-ரை.) பட்டினமென்னுங் குறிப்பானும் பண்டமென்னுங் குறிப்பானும் இரண்டாவது நீர், கடலையுணர்த்தும்; தலைமையா லுணர்த்திற் றெனினுமாம்; இடத்து நிகழ்பொருளை இடத்தின்மேலேற்றி ‘நீர் வழங்கு' மெனப்பட்டது.நாட்டானென்பது நாட்டிலுள்ள குடிமக்களின் நன்மையானென்க. ஆடலென்றது ஈண்டு நடிப்பு.

(86)

 87. ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் - என்றும்
நன்றூக்கல் அந்தணர் உள்ளம் பிறனாளும்


(பாடம்) 1 பாடலால்.