பக்கம் எண் :

78

 நாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல்
கேளிர் ஒரீஇ விடல்.

(இ-ள்.) பெண்டிர் - பெண்மக்களின், தொழில் நலம் - தொழிற்சிறப்பு, என்றும் ஒன்று ஊக்கல் - எந்நாளும் தங்கணவரோடு ஒருமைப்பட்டு முயன்றொழுகலாம்; அந்தணர் உள்ளம் - அந்தணரின் கருத்து, என்றும் நன்று ஊக்கல் - இனிய எண்ணங்களையே முயன்று எழுவித்துக் கொண்டிருத்தலாம்; மன்னர் - அரசரின், தொழில் நலம் - தொழிற்சிறப்பு, பிறன் ஆளும் - வேற்றரசன் அரசாள்கின்ற, நாடு ஊக்கல் - நாட்டினைக் கொள்ள முயன்றொழுகலாம்; கேளிர் - சுற்றத்தாரை, ஒரீஇவிடல் - நீக்கி விடுதல், கேடு ஊக்கல் -கேட்டுக்கு முயறலாகும்.

(க-து.) கணவரோடு ஒருமைப்பட்டு நிற்க முயலுதலே பெண்டிர்க்கு நற்செய்கையாகும்; அற நினைவுகளை எழுப்பிக் கொண்டிருக்க முயலுதலே அந்தணருள்ளத்துக்குச் சிறப்பு;பிறன் ஆளும் நாட்டைப் பெற முயலுதலே மன்னர்க்கு உரிய செய்கையாம்;சுற்றத்தாரை நீக்கி வாழ்தல் கேட்டுக்கு முயலுதலேயாகும்.

(வி-ரை.) ஊக்கம் - முயறல்.தொழில் நலம் - தொழிலின் நன்மை; ஒன்றென்றது ஈண்டு ஒன்றாங் கருத்துடையது.தன்னோடொப்பது இல்லாமையால் ‘ஒன்று' என்பது எண்ணலளவை யாகுபெயராய் ஒப்பற்ற ‘கற்பு' எனினும் பொருந்தும்.ஒரீஇவிடல் : சொல்லிசையளபெடை. பெண்டு - பெண்மை. நன்று : அறத்தின்மேற்று.நாடூக்கல் - பெறவென்றொன்று அவாய் நிலையான் வருவித்துக்கொள்க. விடல் : தொழிற்பெயர். என்றும் என்பதை நடுநிலைத் தீவகமாக்கி,என்றும் நன்றூக்கல் என்றுமியைக்க.

(87)

 88. கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்
தள்ளாமை வேண்டுந் தகுதி யுடையன
நள்ளாமை வேண்டுஞ் சிறியரோடு யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை.

(இ-ள்.) கடிய - அஞ்சற்பாலவான துன்பங்கள், வருதலால் - பின்பு வருதலால், கள்ளாமை வேண்டும் - பிறர்பொருளைத் திருடாமை வேண்டும்; தகுதியுடையன -