பக்கம் எண் :

79

தமக்குத் தகுதியுடைய ஒழுக்கங்களை, தள்ளாமை வேண்டும் - தவிராமை வேண்டும்; சிறியாரோடு - சிற்றினத்தாரோடு; நள்ளாமை வேண்டும் - நட்புக் கொள்ளாமை வேண்டும்; யார்மாட்டும் - யாரிடத்திலும், பகை - பகையை, கொள்ளாமை வேண்டும் - பாராட்டாமைவேண்டும்.

(க-து.) கொடுந்துன்பங்கள் பின்பு உண்டாதலால் என்றுந் திருடாமை வேண்டும்; தகுதியுடைய ஒழுக்கங்களைத் தவிராமை வேண்டும்; சிற்றினத்தாரோடு சேராமை வேண்டும்; பகைகொள்ளாமை வேண்டும்.

(வி-ரை.) கள்ளாமை முதலியன எதிர்மறைத் தொழிற் பெயர்கள். கடிய : பலவின் படர்க்கைக் குறிப்பு வினைப்பெயர்.நள்ளாமை - நெருங்காமை; யார்மாட்டுமென்பது இளைத்தார் மாட்டுமென்றற்கு.

(88)

 89. பெருக்குக நாட்டாரை நன்றின்பா லுய்த்துத்
தருக்குக வொட்டாரைக் கால மறிந்தாங்கு
அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக
செல்லா இடத்துச் சினம்.

(இ-ள்.) நட்டாரை - ஒருவன் தனக்கு நண்பரானாரை, நன்றின்பால் உய்த்து - நன்மையிற் செலுத்தி, பெருக்குக - நல் வாழ்வில் உயர்த்துக; ஒட்டாரை - பகைவர்களை, காலம் அறிந்து - உரிய காலந் தெரிந்து, தருக்குக - மறங்கொண்டு வெல்க; யார் மாட்டும் - யாவரகத்தும், உண்டி -அடுத்துண்ணுதலை, அருக்குக - சுருக்கிக்கொள்க;செல்லாவிடத்து-செல்லுந் தகுதியில்லா விடத்து, சினம் சுருக்குக -சினத்தைத் தணித்துக்கொள்க.

(க-ரை.) நண்பரை நல்வாழ்வி லுயர்த்துக; பகைவரைக் காலமறிந்து வலிசெய்க; யாவரகத்தும் அடுத்துண்ணுதலைக் குறைத்துக் கொள்க;செல்லத்தகாத இடத்திற் சினத்தைத் தணித்துக்கொள்க.

(வி-ரை.) நட்டார்க்கு நன்மை செய்யுநேரம் எப்போது வாய்க்குமென்று எவரும் எண்ணிக்கொண்டிருத்தலே நட்பின் சிறப்பென்றபடி. தருக்குதல்-வீரங்கொள்ளல்; வெற்றிக்கென்று கொள்க.யார்மாட்டுமென்றார், நெருங்கிய நண்பர் உறவினர்வீட்