பக்கம் எண் :

80

டிலும் என்றற்கு. உண்டி, ஈண்டுத் தொழிற்பெயர். செல்லாவிட மென்றதை, வலியார் மாட்டெனக் கொள்க. 'செல்லாவிடத்துச் சினந்தீது' (வெகுளாமை, 2) என்று நாயனார் அருளிச் செய்தலின் வலியார்மாட்டெனக் கூறும் உரையே உரையாதலறிக.ஆங்கு : அசை. அருக்குக : அருகு என்னும் பகுதி இரட்டித்துப் பிறவினையாயிற்று.

(89)

 90. மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய
நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த
தூணின்கண் நிற்குங் களிறு.

(இ-ள்.) மடிமை -முயற்சியின்மை, கெடுவார்கண் - கெடு வாரிடத்திலேயே, நிற்கும் - ஏற்படும்; கொடுமை - தீமை; பேணாமை செய்வார்கண் - மேலோர் விரும்பாமையைச் செய்வாரிடத்தில், நிற்கும் - உண்டாகும்; நற்பெண்டிர் - நன்மகளிர், பேணிய - விரும்பப்பட்ட, நாணின் வரை - நாணத்தின் எல்லையில், நிற்பர் - நிற்பார்கள்; களிறு - யானை, நட்டு அமைந்த - கீழே நட்டு வலிவமைந்த; தூணின் கண் - தூண் வலுவில்; நிற்கும் -நிலைபெறும்.

(க-ரை.) கெடுவாரிடத்திற் சோம்பலிருக்கும், சான்றோர் விரும்பாதவற்றைச் செய்வாரிடத்தில் தீமை யேற்படும்; நல்லியல்புடைய மகளிர் நாண் எல்லையில் நிற்பர்; யானை தூணெல்லையில் நிற்கும்.

(வி-ரை.) கெடுவார் - பின்பு கெடுவார்; பேணாமையென்னும் பண்பு அஃதுடைய செயல்களின் மேனின்றது.பேணாமை - காக்கத்தக்க குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்க முதலியவற்றைக் காவாமையுமாம்; அற்றாயின், எதிர்மறைத் தொழிற்பெயர். நாணின் வரை நிற்பரென்பது நாண்கெடும் தொழில்களைச் செய்யாரென்றபடி. தூண் - கட்டுத்தறி. தான், ஆம் : அசைகள்.

(90)

 91. மறையறிப வந்தண் புலவர் முறையொடு
வென்றி யறிப அரசர்கள் - என்றும்
வணங்கல் அணிகலஞ் சான்றோர்க்கு அஃதன்றி
அணங்கல் வணங்கின்று பெண்.