பக்கம் எண் :

81

(இ-ள்.) அந்தண் புலவர் - அந்தண்மையுடைய அறிஞர்கள், மறை அறிப - நான்மறைப் பொருளை அறிவார்கள்; அரசர்கள் மன்னர்கள், முறையோடு - நடுவு நிலைமையோடு, வென்றி - வெற்றியும்; அறிப - அறிவார்கள்; சான்றோர்க்கு - பெருந்தகைமை நிறைந்தவர்களுக்கு, என்றும் - எப்பொழுதும், வணங்கல் - வணங்குதலே, அணிகலம் - அணிகலம் போல்வதாம்; அஃது அன்றி - அதுவேயுமல்லாமல், அணங்கல் - கணவனையல்லாத வேறு தெய்வங்களை, பெண் வணங்கின்று -பெண்மக்கள் வணங்குதலில்லை.

(க-து.) அந்தணர் மறை யறிப; அரசர் முறையும் வெற்றியும் அறிப; சான்றோர்க்கு அணிகலம், என்றும் வணக்கமுடையரா யிருத்தல்;பெண்டிர் கணவனையன்றி வேறு தெய்வந்தொழார்.

(வி-ரை.) புலவருள் அந்தண்மையுடையோர் அந்தணரெனப் படுவராகலின், ‘அந்தண் புலவ' ரென்று விதந்துரைக்கப்பட்டது.முறை - குடிகளையாளும் அறமுறை; வென்றி - பகைப் புறங்காணும் வெற்றி, அஃதன்றி யென்றது, வாளா என்னுங் கருத்தில் வந்தது. அணங்கல் தொழிலாகு பெயராய்த் தெய்வத்தை யுணர்த்தாநின்றது; அணங்குதல் - விரும்புதல், அஞ்சுதல் ; அணங்கை எனவும் பாடம்.

(91)

 92. பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் காப்பினும் 
பெட்டாங் கொழுகும் பிணையிலி-முட்டினுஞ் 
சென்றாங்கே சென்றொழுகும் காமம் கரப்பினுங்
கொன்றான்மேல் நிற்குங் கொலை.

(இ-ள்.) பண்பு உடையாள் - நல்லியல்புடைய பெண், பட்டாங்கே - கற்புண்மைப்படியே, பட்டு - ஒத்து, ஒழுகும் -ஒழுகுவாள்; பிணை இலி - மனம் பொருந்துத லில்லாதவள், காப்பினும் - கணவன் காவல் செய்யினும், பெட்டாங்கு - தான் விரும்பியபடியே, ஒழுகும் - பிறரோடு மருவி யொழுகுவாள்; காமம் - காமவியல்பு, முட்டினும் - இடையூறு உண்டாயினும், சென்றாங்கே - முன்பு சென்றபடியே, சென்று ஒழுகும்-பின்புஞ் சென்று நிகழும்; கொலை-கொலைப்பழி,கரப