பக்கம் எண் :

82

பினும் - எவ்வளவு மறைத்தாலும், கொன்றான்மேல் - கொலை செய்தவன் மேலேயே, நிற்கும் -நிலைபெறும்.

(க-து.) நல்ல பெண் காவலில்லாவிடினும் கற்பொழுக்கத்தையே மேற்கொண்டொழுகுவள்; நற்பண்பில்லாதவள் எத்தனை காவல் செய்யினுந் தான் விரும்பியவாறே பிறரைக் காதலித் தொழுகுவாள்; காமவியல்பு எவ்வளவு இடையூறுகள் நேர்ந்தாலும் முன் நிகழ்ந்தபடியே நிகழும்; கொலைப்பழி எவ்வளவு மறைப்பினும் கொன்றான் மேலேயேவெளிப்படும்.

(வி-ரை.) பட்டாங்கு - இயல்பு; ஈண்டுக் கற்பியல்பு, பண்பு, காதலெனல் பொருந்தும் : பிணையிலிக்குக் காப்பினுமென வந்தமையின். பண்புடை யாளுக்குக் காவாவிடினுமென்றொன்று வருவித்துக் கொள்க. ஆங்கு : வினையெச்சப் பொருட்டு, உடையான்றொழிலை உடைமைமே லேற்றிக் காமமெனக் கூறப்பட்டது. கொலை :ஆகுபெயர்.

(92)

 93. வன்கண் பெருகின் வலிபெருகும் பான்மொழியார்
இன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற
மென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கட்
கயம்பெருகிற் பாவம் பெரிது.

(இ-ள்.) வன்கண் பெருகின் - அஞ்சாமை மிகுந்தால்; வலி பெருகும் - வலிமையும் ஒருவனுக்கு மிகும்; பால் மொழியார் - பால்போலும் இனிய சொல்லையுடைய மனைவியர்பால், இன்கண் - இனிய கண்ணோட்டம், பெருகின் - பெருகுமானால், இனம் பெருகும் - சுற்றத்தார் பெருகுவர்; சீர் சான்ற - சிறப்பு மிக்க, மென்கண் - அருட்டன்மை, பெருகின் - மிகுமானால், அறம் பெருகும் - அறவினைகள் மிகும்; வன்கண் - கொடுமையையுடைய காயம் பெருகின் - கீழ் மைத்தனம் மிகுமானால், பாவம் பெரிது - தீ வினைச்செயல் மிகுதியாம்.

(க-து.) அஞ்சாமை மிகுந்தால், வலிமை மிகும்; மனையாள் மாட்டுக் கண்ணோட்டம் மிகுந்தால் இனம் பெருகும்; அருளிரக்கம் மிகுந்தால் அறம் மிகும்; கீழ்மைக்குணம் மிகுந்தால்தீவினைமிகும்.

(வி-ரை.) வன்கண் அஞ்சாமைப்பொருட்டாதல் : ‘வன்கட்கானவன்' (கிள்ளைப்பத்து, 3.) என்னும்ஐங்குறுநூற்றினாற்