கொள்க. அஞ்சாமையென்னும் உள்ள வலிமை உடம்புக்கு வலிமையைத் தருதலின், இங்ஙனம் கூறப்பட்டது. கண் - கண்ணோட்டம்; கண்ணோட்டத்தினும் அருட்டன்மை யென்பது இரக்கவியல்பு மிக்கதாகலின், அதனை ‘மென்கண்' என வியந்தார். பெரிதென்றதை ஆக்கவினை கொடுத்து வினைப்படுத்திக் கொள்க. இன்கண், மென்கண் என்பவற்றில் ‘கண்'கருவியாகுபெயர். (93) 94. இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம் வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம் கிளைஞரில் போழ்திற் சினங்குற்றம் குற்றந் தமரல்லார்1 கையகத் தூண். (இ-ள்.) இளமைப் பருவத்து - இளம் பருவத்தில், கல்லாமை குற்றம் - கல்லாதொழிதல் பிழையாம்; வளம் இலா - பொருள் வருவாய் இல்லாத, போழ்தத்து - காலத்தில், வள்ளன்மை - ஈகையியல்பு, குற்றம் - பிழையாம்; கிளைஞர் இல்போழ்தில் - உறவினர்கள் துணையில்லாத காலத்தில், சினம் குற்றம் - பிறரோடு, சினத்தல் குற்றமாம்; தமர் அல்லார் - தமக்கு உள்ளன்பில்லாதாரது, கையகத்து - இடத்தில், ஊண் - உண்ணுதல், குற்றம் -பிழையாம். (க-து.) இளம் பருவத்திற் கல்லாமை குற்றம்; பொருளில்லாத காலத்தில் ஈதல் குற்றம்; உறவினர் துணையில்லாத காலத்தில் பிறரைச் சினத்தல் குற்றம்; உள்ளன்பிலார்மாட்டு உண்ணுதல்,குற்றம். (வி-ரை.) ‘வளமில் குள' (81) மென்றாற்போல ஈண்டு வளமென்பது வருவாயைக் குறித்தமை கண்டுகொள்க. தமர் உள்ளங் கலத்தாற் றம்மவரென்க. ‘தமர் தற்றப்பி னதுநோன்றல்லும்' என்னும் புறநானூற் றுரையில், தாமரைத் தனக்குச் சிறந்தோரென் றுரைக்கப்பட்டது மிது. கையகத்து : வேற்றுமை மேற் சாரியை நின்றது. ஊண் : முதனீண்ட முதனிலைத் தொழிற்பெயர். போழ்தத்து :அத்துச்சாரியை ஏழாம் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்வந்தது. (94) 95. எல்லா விடத்துங் கொலைதீது மக்களைக் கல்லா வளர விடல்தீது - நல்லார்
(பாடம்) 1 இல்லகத்து.
|