பக்கம் எண் :

84

 நலந்தீது நாணற்று நிற்பிற் குலந்தீது
கொள்கை யழிந்தக் கடை.

(இ-ள்.) எல்லா இடத்தும் - எவ்வகையினும், கொலைதீது - ஓருயிரைக் கொலை செய்தல் தீதாகும்; மக்களை - புதல்வரையும் புதல்வியரையும் கல்லா வளரவிடல் - கல்வி கல்லாமல் வளரும்படி விடுதல், தீது - தீதாம்; நாண் அற்று நிற்பின் - நாணம் இன்றி ஒழுகினால், நல்லார் நலம் தீது - பெண்களின் அழகு தீதாகும், கொள்கை - தக்க கொள்கைகள், அழிந்தக் கடை - அழிந்தவிடத்து; குலம் தீது -குலம் தீதாகும்.

(க-து.) எவ்வகையாலுங் கொலை தீதாம்; மக்களைக் கல்லாமல் வரவிடுதல் தீதாம்; நாணில்லையாயின் மகளிரின் அழகு தீதாம்;கொள்கை அழிந்துவிட்டால் குலம் தீதாம்.

(வி-ரை.) எல்லாவிடத்து மென்றது, வேள்வி முதலான இடங்களினுமென்க. கல்லா - வினையெச்சவீறு தொகுத்தலாய் நின்றது. நிற்பின் : உறைதலின் மேற்று. கடை : வினையெச்சப் பொருளது. அழிந்தக்கடை -அழிந்தால்.

(95)

 96. ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்து
போகம் உடைமை பொருளாட்சி யார்கண்ணுங்
கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்தாள்வான்
உண்ணாட்டம் இன்மையும் இல்.

(இ-ள்.) ஆசாரம் என்பது - நல்லொழுக்கம் என்பது, கல்வி - கல்வியறிவின் பயனாகும்; அறம் சேர்ந்த - அறவினைகளோடு சேர்ந்த, போகம் உடைமை - இன்ப நுகர்ச்சி, பொருள் ஆட்சி - செல்வத்தைக் கையாளுதலின் பயனாகும்; யார் கண்ணும் - யாரிடத்திலும், கண்ணோட்டம் இன்மை - கண்ணோட்டம் இல்லாமை, முறைமை - நடுநிலையாக ஆளுமுறைமையாம்; தெரிந்து ஆள்வான் - பிறரோடு ஆராய்ந்து அரசாளுபவன், உள் நாட்டம் இன்மையும் - தன்னுள்ளத்தில் ஆராயாமையும், இல் -இல்லை.

(க-து.) நல்லொழுக்கமென்பது கல்வியின் பயன்; அறஞ்செய்தலோடு இன்பத்தை நுகர்தலென்பது செல்வத்தை முறை