பக்கம் எண் :

85

யாக ஆளுதலின் பயன்; யாரிடத்தினுங் கண்ணோட்டமில்லாமை நடுவு நிலையோடு அரசாளுமுறையாம்;தன்னுளத்தேயுந் தனியாக ஆராய்வோன் தெரிந்து அரசாளுமியல்பினன்.

(வி-ரை.) தெரிந்தாள்வானென்றது, அமைச்சர் முதலாயினாரோடுந் தெரிந்தாளுதல். உள்நாட்டம் - தனக்குள் ஆராய்ச்சி; என்றது, அரசன் வெறுங் கேள்வியறிவினானேயே செய்வானல்லன், அதனைத் தன்னுள்ளும் வைத்துத் தனியே ஆராய்ந்துஞ் செய்வனென்பது. நாட்டம் :தொழிற்பெயர்.

(96)

 97. கள்ளின் இடும்பை களியறியும் நீர்இடும்பை
புள்ளினுள் ஓங்கல் அறியும் நிரப்பிடும்பை
பல்பெண்டிர் ஆள னறியும் கரப்பிடும்பை
கள்வன் அறிந்து விடும்.

(இ-ள்.) கள்ளின் இடும்பை - கள்ளைப் பெறாமையால் வருந் துன்பத்தை, களி அறியும் - கள்ளுண்டு களிப்பவன் அறிவான்; நீர் இடும்பை - நீரைப் பெறாமையால் வருந்துன்பத்தை, புள்ளினுள் - பறவைகளுள், ஓங்கல் அறியும் - வானம்பாடிப் பறவை யறியும்; நிரப்பு இடும்பை - பொருளில்லாமையால் வரும் வறுமைத் துன்பத்தை, பல் பெண்டிராளன் - மனைவியர் பலரையுடைய கணவன், அறியும் - அறிவான்; கரப்பு இடும்பை - ஒன்றை ஓரிடத்து ஒளித்து வைப்பதன் துன்பத்தை, கள்வன் - திருடன், அறிந்துவிடும் -அறிந்து கொள்வான்.

(க-து.) கள் பெறாமையா லுண்டாகுந் துன்பத்தைக் கட்குடியன் அறிவான்; நீர் பெறாமையா லுண்டாகுந் துன்பத்தை வானம்பாடிப்பறவை அறியும், பொருளில்லாமையா லுண்டாகும் வறுமைத் துன்பத்தை மனைவியர் பலரை யுடையவன் அறிவான்; ஒன்றை ஒளித்து வைப்பதிலுள்ள துன்பத்தைத் திருடனறிவான்.

(வி-ரை.) களி : வினைமுதற் பொருண்மையாகிய இகரம் புணர்ந்து கெட்டதென்க. புள்ளினுள் ஓங்கல், வானம்பாடிப் புள். அது வானினோங்கிப் பறத்தலால் வந்த பெயராதலின் ஈண்டு ஓங்கல் தொழிலாகு பெயர். வானம்பாடிப்புள் மழைத்துளியைப் பருகி உயிர் வாழுமியல்பினதாகலின், அத் துளி கிடைக்கப் பெறாவிடத்து அது மிகவும் வருந்தும்.இவ்வுண்மை 'தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி' என்னும்பட்டினப்பாலை