பக்கம் எண் :

86

யடிகளாலும் (34), 'வானம்பாடி வறங்களைந் தானா தழிதுளி தலைஇய புறவிற் காண்வர' என்னும் ஐங்குறுநூற் றடிகளானும் (418) பெறப்படும். நிரப்பும் கரப்பும் தொழிற்பெயர். நிரப்பு - குறைபாடு.

(97)

 98. வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச்
சாயினுந் தோன்றா கரப்புச்சொல் - தீய
பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல்
கீழ்கள்வாய்த் தோன்றி விடும்.

(இ-ள்.) வடுச்சொல் - பழிச் சொற்கள், நயம் இல்லார் வாய் - அன்பில்லாதாரது வாயில், தோன்றும் - பிறக்கும்; கற்றார் வாய் - அறிவு நூல்களைக் கற்றவரது வாயில், கரப்புச் சொல் - வஞ்சனைப் பேச்சுக்கள், சாயினும் தோன்றா - அவர் கெடுவதாயினும் பிறவா; தீய பரப்புச் சொல் - தீயவற்றைப் பரப்புதலா லாகும் பேச்சுக்கள், சான்றோர்வாய் - மேன்மக்கள் வாயில், தோன்றா - தோன்றமாட்டா; கரப்புச்சொல் - ஒன்றனை மறைத்தற் சொற்கள், கீழ்கள் வாய் - கீழ்மக்களது வாயில், தோன்றி விடும் -பிறந்துவிடும்.

(க-து.) அன்பில்லாதார் வாயிற் பழிச்சொற்கள் தோன்றும்; காற்றார் வாயில் வஞ்சனைச் சொற்கள் தோன்றா; சான்றோர் வாயில் தீயவற்றைப் பரப்புஞ் சொற்கள் தோன்றா; கீழ்மக்கள் வாயில் ஒளிப்புச் சொல் தோன்றிவிடும்.

(வி-ரை.) வடு - பழி.சாயினும் - இறப்பினுமாம். தீய பரப்புஞ் சொல். கோட்சொல்; சான்றோர் - நல்லியல்புகள் நிறைந்தோர். கீழ்கள் - இழிவான வியல்புடையவர்கள்; இது பண்பாகுபெயர். நயம் - நட்புக் குணம், அன்பு; நண்பாற்றா ராகி நயமில செய்வார் (குறள் - 998)என்புழிக் காண்க.பரப்புச் சொல் -இல்லாத பழிச்சொற்களை ஏற்றிப் பலரறியக் கூறுதல்.

(98)

 99. வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்
சாலும் அவைப்படிற் கல்லாதான் பாடிலன்
கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்
பேதையார் முன்னர்ப் படின்.