பக்கம் எண் :

88

விளக்கினும் - அல்லது அறிவு கூறி விளக்கினாலும், மாசு உடைமை காட்டிவிடும் - கீழ்மை யியல்பையே காட்டுவிடுவான்.

(க-து.) அழுக்குச் சேர்ந்தாலும் நன் மணியின் பெருமை குறையாது; கழுவி எடுத்துக்கொண்டாலும் இரும்பின்கண் மாசுண்டாகும்; கீழ் மக்களை ஒறுத்தாலும் அவர்கள் தங் கீழ்மைத் தன்மையையே காட்டுவார்கள்;அன்றி அறிவுகூறி விளக்கினாலும் அக் கீழ்மையையே காட்டுவார்கள்.

(வி-ரை.) மணிக்குச் சீரென்றது ஒளி; இரும்புக்கு மாசென்றது துரு. ஆம் : அசை; பூசுதல், கழுவுதல்; வாய் பூசுதலென்பதிற் போல வென்க. பாசத்து ளிடினும் விளக்கினுமென இரண்டாய்ப் பிரித்துரைத்துக்கொள்க. அன்றி நான்மணிக்கடிகையில் ஒவ்வொரு செய்யுளினும் நந்நான்கு பொருள்களே சொல்ல வேண்டுமாயினும், ஒரோவொரு செய்யுளில் மூன்று பொருள்கள் காணப்படுதலை நலிந்து பொருள் கொள்ளாது, நூற்பெயர், மிகுதிபற்றி யமைந்ததெனவுங் கொள்ளலாம்.கீழ்க்கு மாசென்றது அறியாமை. உம்மை : இழிவு சிறப்பு. உடைமை செயப்படு பொருள் குன்றாத குறிப்புத்தொழிற்பெயர்.

(100)

 101. எண்ணொக்குஞ் சான்றோர் மரீஇயாரின் தீராமை
புண்ணொக்கும் போற்றார் உடனுறைவு - பண்ணிய 
யாழொக்கும் நட்டார் கழறுஞ்சொல் பாழொக்கும்
பண்புடையாள் இல்லா மனை.

(இ-ள்.) மரீஇயாரின் - நெடுநாள் பழகினவரைப் போல, சான்றோர் - ஆன்றோர்களை; தீராமை - நீங்காமலிருத்தல், எண் ஒக்கும் - அறிவுடைமையை யொக்கும்; போற்றார் - தம்மைப் போற்றி இணங்காதவரோடு, உடன் உறைவு - உடனிருந்து வாழ்தல், புண் ஒக்கும் - புண்ணினை ஒக்கும்; நட்டார் - நட்பாயினார், கழறும் சொல் - இடித்துரைக்கும் வன்சொல், பண்ணிய நரம்புகளால் இசை கூட்டப்பட்ட; யாழ் ஒக்கும் - யாழிசையை ஒக்கும்.பண்புடையாள் - மனை மாட்சிமையுடைய மனைவி, இல்லா மனை - இல்லாத வீடு, பாழ் ஒக்கும் -பாழ்மனையை ஒக்கும்.

(க-து.) சான்றோரை நீங்காதுறைதல் அறிவுடைமையாகும்;இணக்கமில்லாரோடு உடனுறைதல் புண்ணுக்குநிகராகும்