பக்கம் எண் :

89

நட்புடையார் இடித்துரைக்குஞ் சொல் வலிதாயினும் அது யாழோசையைப் போலும் இனிமையுடையதாகும்; மனைமாட்சியுடைய மனையாளில்லாத மனைபாழ்மனையை யொக்கும்.

(வி-ரை.) எண் - அறிவு; ‘தொக்கிருந் தெண்ணினா னெண்ணப்படும்' என்று முன்வந்ததையும் கருதுக. ‘சான்றோர் மரீஇயா ரிற்றீராமை. யென்பதை. மருவி யமைந்தாரை நீங்காமையென்று பொருளுரைப்பினு மமையும். ‘அறியராத் தீராமை' எனவும் பாடம். கழறல். தவறு கண்டவிடத்து இடித்துரைத்தல். யாழ் - யாழினிசையையும். பாழ் - பாழ்மனையையும் உணர்த்தலால் அவை முறையே கருவியாகுபெயரும் பண்பாகுபெயருமாம். எண் : முதனிலைத் தொழில்பெயர்.

(101)

 102. ஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்து
வாரி சிறிதாயின் பெண்ணூரும் மேலைத்
தவஞ்சிறி தாயின் வினையூரும் ஊரும்
உரன்சிறி தாயின் பகை.

(இ-ள்.) ஏரி சிறிதாயின் - குளம் சிறிதானால். நீர் ஊரும் - நீர் வழிந்து விடும். இல்லத்து - வீட்டில், வாரி சிறிதாயின் - வருமானங் குறைவானால், பெண் ஊரும் - மனையாள் நிலை கடந்து போவாள்; மேலைத் தவம் சிறிதாயின் - முற்பிறப்பின் நல்வினை குறைவானால், வினை ஊரும் - தீவினை பெருகும்; உரன் சிறிதாயின் - ஒருவன் வலிமை சிறிதானால், பகை ஊரும் -பகைவர் மேற்கொள்வர்.

(க-து.) ஏரி சிறிதானால் நீர் வழிந்து போய்விடும். வீட்டில் வருவாய் குறைவானால் மனையாள் வரம்பு கடந்து பேசுவள்; முன்னைத் தவம் சிறிதானால் தீவினை மிகுந்து வருத்தும்; வலிமை சிறிதானால்பகைவர் மேற்போந்து வென்றிடுவர்.

(வி-ரை.) வாரி : தொழிலடியாகப் பிறந்த பெயர். இடையறா தொழுகுதலென்னும் பொருளால் வருவாய்க்காயிற்று. இ : வினைமுதற் பொருண்மை விகுதி. பகை : பண்பாகு பெயர். தவமென்னுங் குறிப்பால் வினையைத் தீவினையென் றுரைத்துக் கொள்க. மேலை : பண்படியாகப் பிறந்த பெயர்.

(102)

 103. வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால் ஆகுஞ் செழுங்கிளை செய்த