பக்கம் எண் :

90

 பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம்.

(இ-ள்.) வசை - நிந்தனை, வைததனால் ஆகும் - தான் பிறரைவைததனால் ஒருவனுக்கு உண்டாகும், செழும்கிளை - மிக்க உறவு, வணக்கமது செய்ததனால் ஆகும் - எல்லார்க்கும் வணங்கி யொழுகினமையால் உண்டாகும்; போகம் - இன்பவாழ்க்கை, செய்த பொருளினால் ஆகும். தேடிப் பெருக்கிய பொருளினால் உண்டாகும்; அறம் - அறவினை, நெகிழ்ந்த அருளினால் ஆகும் -குழைந்த இரக்கத்தினால் உண்டாகும்.

(க-து.) பிறரை வைததனால் தமக்கு வசையுண்டாகும்; வணங்கி யொழுகுதலால் உறவினர் மிகுவர்;பொருளைத் தொகுத்ததனால் இன்ப வாழ்க்கை யுண்டாகும்; குழைந்த இரக்கத்தினால் அறவினை யுண்டாகும். 

(வி-ரை.) ஏ : அசை; வணக்கமது, அது : பகுதிப்பொருள் விகுதி. செய்த வென்றது உண்டாக்குதலின் மேற்று; 'செய்க பொருளை' (756) என்னும் திருக்குறளுக்குப் பரிமேலழகருரைக்கும் உரை ஈண்டு நினைவு கூர்தற்குரியது : நெகிழ்ந்த அருள், இயற்கை நவிற்சி, கிளை : உவமையாகு பெயர்.

(103)

 104. ஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவ னறியா தவனும் ஒருவன்
குணன் அடங்கக் குற்றமு ளானும் ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும் இல்.

(இ-ள்.) எல்லாம் - எல்லாக் கலைகளையும்; அறிவான் ஒருவனும் இல் - தெரிந்தவனொருவனும் இல்லை; யாதொன்றும் - ஒரு சிறிதும், அறியாதவன் ஒருவனும் இல் - தெரியாதவனொருவனும், இல்லை; குணன் அடங்க - ஒரு நல்லியல்பும் இலதாக, குற்றம் உள்ளான் ஒருவனும் இல் - பிழையேயுள்ளவனொருவனும் இல்லை; கணன் அடங்க - அறியாமை சிறிதும் இலதாக, கற்றானும் இல் - கற்றறிந்தவனும் இல்லை.