பக்கம் எண் :

92

இன்பமில்லாத, வன் சொலான் - வன்சொல்லினால், வசை மனம் ஆகும் - கெட்ட கருத்து உண்டாகும்;மென்சொலின் - நயமான சொல்லை யுடைய, நாவினால் - நாக்கினால், அருள்மனம் ஆகும் - இரக்க எண்ணம் உண்டாகும்; அம் மனத்தான் - அவ்வருள் நெஞ்சத்தால், வீவு இலா - அழிவில்லாத, வீடு ஆய்விடும் - வீடு பேறுண்டாகும்.

(க-து.) இன்சொல்லால் நட்புரிமை யுண்டாகும்; வன்சொல்லாற் கெடுநினைவு உண்டாகும்; நயமான சொற்களால் அருள்நெஞ்சம் உண்டாகும்; அவ்வருள் நெஞ்சத்தால் அழிவிலாத வீடுபேறுண்டாகும்.

(வி-ரை.) இன்சொல்லால் நல்லோர் நட்பும், அந் நட்புரிமையால் நல்லெண்ணமும், அவ்வெண்ணத்தால் அருள் நெஞ்சமும், அதனால் வீடுபேறு முண்டாகு மென்பது. வீவு : தொழிற்பெயர். ஆய்விடும் : ஒரு சொல். நா என்றதனால் அதற்கினமாகிய மெய்ம்மனங்களின் அடக்கத்தையும் கொள்க.

(106)

நான்மணிக்கடிகை மூலமும் உரையும்.

முற்றிற்று.