தனால் நூல்வழங்கவேண்டிய தமிழ்நாட்டெல்லையும், ‘‘ஐந்திணையைம்பது’’ என்றதனால் நூற்பெயரும், ‘‘யாத்த’’ என்றதனால் செய்யுள் வடிவமாகிய நூல் யாப்பும், ‘‘பண்புள்ளிநின்ற பெரியார்,’’ என்றதனால் கேட்போரும், ‘‘பயன்,’’ என்றதனால் நூற்பயனும் பெறப்பட்டமை காண்க. என்னை? ‘‘ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை, நூற் பெயர் யாப்பே நுதலிய பொருளே, கேட்போர் பயனோடாயெண் பொருளும், வாய்ப்பக் காட்டல் பாயிரத்தியல்பே,’’ என்றா ராகலி னென்க. புள்ளியிடுதல் - ஐந்தொகை முதலிய பெருங்கணக்குகளிட்டுப் பார்த்தல். ‘‘மாறன் பொறையன்’’ என்பது இந்நூலாசிரியருக்குப் பாண்டிமன்னனா லளிக்கப்பட்ட பட்டப் பெயராம். ‘‘வண்புள்ளி’’ என்ற அடைமொழிகளால் இவர் பாண்டி நாட்டு அரசியலிற் பண வரவு செலவுக்குரிய பெருநிலையொன்றிற் பெரும் பெயர் பெற்ற பெரியாராவரெனக் கருதக் கிடக்கின்றது. புள்ளி - பணத்தொகை. செந்தமிழ் + சேராதவர் = செந்தமிழ் சேராதவர் ; இரண்டன் தொகை யாகலின், இயல்பாயிற்றென்க. புணர்த்து + யாத்த = புணர்த்தியாத்த : யகரம் வரக் குறள் உகரம் இகரமாகத் திரியலாயிற்று. இப் பாயிரம் மற்றச் செய்யுட்களைப் போல், பழைய பொழிப்புரையினைக் கொண்டிருக்கவில்லை. நூல் முதலாவது முல்லை மல்லர்க் கடந்தா னிறம்போன் றிருண்டெழுந்து செல்வக் கடம்பமர்ந்தான் வேன்மின்னி - நல்லாய் ! இயங்கெயி லெய்தவன் றார்பூப்ப வீதோ மயங்கி வலநேருங் கார். [தலைமகளைத் தோழி பருவங்காட்டி வற்புறுத்தியது] (பதவுரை) நல்லாய் - பெண்மக்களிற் சிறந்த தலைவியே, கார் - மேகங்கள், மயங்கி - நாற்புறமும் கலந்து சூழ்ந்து, இதோ நாம் காணும் இக்காட்சியிற்பட்டு, மல்லர் - கஞ்சனாற்செலுத்தப்பட்ட மற்போர் வீரர்களை
|