பக்கம் எண் :

6

(பத.) ஒண் தொடி - ஒளிமிக்க வளையணிந்த தலைவியே, இக்கார் - இந்த மேகக் கூட்டமானது, வள் வார் - தோல் வாரினாலே இழுத்துக் கட்டி யமைக்கப்பட்ட, முரசின் குரல் போல் - முரச வாத்திய வொலியினைப் போன்று, இடித்து - இடியினை வீழ்த்து, உரறி - முழங்கி, நல்லார் - கொழுநரைப் பிரிந்த பெண்களின், மனம் கவர - மனமானது வேறு படும்படி, தோன்றி - வெளிப்பட்டு, பணி மொழி - தலைவரால் நமக்குக் கூறப்பட்ட இன் சொற்களை, கொல்வு ஆங்கு - சிதைப்பது போல, கூர்ந்தது - மிகுந்து காணப்படுகின்றது, நம் திறம் - இவ்விதமான நமது நிலையினை, காதலர் - நமதன்புக்குரிய தலைவர், உள்ளார் கொல் - நினைத்துப் பார்க்கமாட்டாரோ? (என்று தோழி தலைவியை வினவினாள்.)

(பதவுரை) நந்திறத்தைக் காதலர் உள்ளார்கொல்லோ ஒண்டோடி! தோலார்ந்த முரசின் குரலினோசைபோல இடித்து முழங்கித் தங் கொழுநரைப் பிரிந்த நல்லார் மனங் கவரும்படி தோன்றி, நங் காதலர் சொன்ன இன்சொல்லைச் சிதைப்பது போல மிக்கது இக்கார்.

(விரி.) ஒண்டொடி - அண்மை விளி. உரற்றல் - ஒலித்தல். கவர்வு - வேறுபாடு. இக்கார் முரசின் குரல் போல்உரறி, தோன்றி, கூர்ந்தது, என முடிக்க. பணி மொழி - ஆற்றியிருக்குமாறு பணித்த மொழிகளுமாம். இன் சொற்கள் - ஆறுதன் மொழிகள். திறம் - தன்மை, நிலை. கொல் - ஐயப் பொருள் கொண்டது. உள்ளிருப்பரேல் திரும்பியிருப்பர், என்பது கருத்து.

(4)

கோடுயர் தோற்ற மலைமே லிருங்கொண்மூக்
கூடிநிரந்து தலைபிணங்கி - ஓடி
வளிகலந்து வந்துறைக்கும் வானங்காண் டோறுந்
துளிகலந்து வீழ்தருங் கண்.

[இதுவ மது.]

(பத.) (என்னருமைத் தலைவியே !) கண் - நின் கண்கள், கோடு - சிகரங்களால், உயர் தோற்றம் - சிறந்த காட்சியினைக் கொண்ட, மலைமேல் - மலைகளின் மீதே, இரும் கொண்மூ - பெரும் மேகக் கூட்டங்கள், கூடி - திரண்டு, நிரந்து - கலந்து, தலை பிணங்கி -