பக்கம் எண் :

7

ஒன்றோடொன்று மாறுபட்டு, ஓடி - வான் வெளியே சென்று, வளிகலந்து - காற்றோடு கூடி, வந்து - கீழிறங்கி, உறைக்கும் - பெய்யும் படியான, வானம் - ஆகாயத்தினை, காண் தோறும் - காணும் வேளைகளி லெல்லாம், துளி கலந்து - கண்ணீர்த் துளிகளை மிகப் பெற்று, வீழ்தரும் - பெய்விக்கின்றன.

(ப-ரை.) குவடுகளுயர்ந்த தோற்றத்தையுடைய மலைகள்மேற் பெரு முகில்கள் திரண்டு மிடைந்து, ஒன்றோடொன்று பிணங்கி யோடிக் காற்றோடு கலந்து பெய்கின்ற விசும்பு காணுந்தோறும் துளி கலந்து பெய்யாநின்றன நின் கண்கள்.

(விரி.) இங்கு, ‘விளிச் சொல்,’ பொருள் விளங்கும் பொருட்டு வருவித்துக் கொள்ளப்பட்டது. கொண்மூ கூடி, நிரந்து, தலை பிணங்கி, ஓடி, கலந்து, வந்துறைக்கும் வானம், எனக் கூட்டுக. கண் வானங் காண்டோறுந் துளிகலந்து வீழ்தரும், என முடிக்க. 

(5)

முல்லை நறுமல ரூதி யிருந்தும்பி
செல்சார் வுடையார்க் கினியவாய், - நல்லாய்!
மற்றியாருமின் னெஞ்சினே மாகி யுறைவேமை
யீரு மிருண்மாலை வந்து.

[இதுவ மது.]

(பத.) நல்லாய் - நல்ல தலைவியே, இருள் மாலை - இருளோடு கூடிய மாலைக்காலமானது, வந்து - தோன்றி, இரும் தும்பி - பெரிய வண்டுகள், முல்லை நறுமலர் - முல்லைக் கொடியில் மலர்ந்து காணும் நல்ல மலர்களில், ஊதி - ரீங்காரஞ் செய்து, செல்சார்வு - செல்வாக்குக் காரணமான தலைவரை, உடையார்க்கு - உடைய பெண்டிர்க்கு, இனியவாய் - இன்பத்தைச் செய்வனவாக, யாரும் இல் - எவரையும் துணை கொண்டிராத, நெஞ்சினேம்ஆகி - கவலைமிக்க மனத்தை உடையேமாகி, உறைவேமை - தங்கியிருக்கின்ற நம்மை, ஈரும் - வருத்தாநின்றது.

(ப-ரை.) நல்லாய் ! இருந்தும்பி முல்லை நறுமலரை ஊதுதலாற் றமக்குச் செல்சார்வாகிய கொழுநரையுடையார்க்கு இன்பத்தைச் செய்வனவாய், யாரும், துணை