பக்கம் எண் :

3
 

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச்
சொல்லுவாளாய்த் தோழி சொல்லிய

ஓங்க லிறுவரைமேற் காந்தள் கடிகவினப்
பாம்பென வோடி யுருமிடிப்பக் கண்டிரங்கும்
பூங்குன்ற நாடன் புணர்ந்தவந் நாட்போலா
வீங்கு நெகிழ்ந்த வளை.

(பத.) ஓங்கல் - உயர்ந்த மலையினது, இறுவரைமேல் - நெருங்கிய பக்கமலையிடத்தே, காந்தள் - காந்தள் செடியானது, கடி - புதிதாக, கவின - அழகுடன் பூக்கவும், (மேகமானது), பாம்பு என - (கண்டார்) பாம்பு என்று (வியக்கும்ணம்,) ஓடி - மின்னுக்கொடி விளங்கப்பெற்று, உரும் -இடியினாலே, இடிப்ப - ஒலிக்கவும், கண்டு - (இவற்றைப்) பார்த்து, இரங்கும் - (காதலர்ப்பிரிந்தார்) வருந்துதற்கிடமான, பூ குன்றம் - அழகிய மலைகள் (சூழ்ந்த,) நாடன் - நாட்டிற்குரிய தலைமகன், புணர்ந்த - (களவுப்புணர்ச்சியில் நம்மைக்) கலந்த, அந்நாள் - அந்த நாளினை, போலா - போன்று (நமக்கு இன்பந்) தோன்றாது, வளை - (நம் கைகளிலுள்ள) வளையல்கள், ஈங்கு - இப்பொழுது, நெகிழ்ந்த - கழன்றன. (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)

(ப-ரை.) மலையினது பக்கமலைமேற் காந்தள் புதிதாக அழகுபெறுதலால், அவற்றின் முகைகளைப் பாம்பென்று கருதிச் சென்று உருமு இடித்தலான், அவற்றைப் பிறர் கண்டிரங்குகின்ற பூங்குன்ற நாடன் புணர்ந்த அந்நாள் போலாவாய், இக்காலத்து நெகிழ்ந்து கழன்ற வெள் வளைகள்.

(விரி.) தலைமகன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, காவன் மிகுதியால் தலைமகளை இரவுக்குறிக்கண் கொண்டுய்க்க வியலாது வருந்திய தோழி தலைமகன் கேட்பத் தலைமகட்குச் சொல்லியதாகுமிது. இதனை நச்சினார்க்கினியர் (தொல். கள. 20.) பகற்குறிக்கண் தலைவன் வருதனீட ஆற்றாது தலைவி தோழிக்குக் கூறியது என்பர். வளைநெகிழு முணர்ச்சி தலைமகட்கே புலனாமாகலின் எவ்வாற்றானு மிதனைத் தலைமகளின் கூற்றென்பது அமைவுடைத்தாமென்க. காந்தள் முகையினை உருமு பாம்பெனக் கருதி யிடித்தல் இல்லது புனையுமாறாகலின்,