வேறுவழியிற் கண்ணளித்தாம். போலா : ஈறுகெட்ட எதிர்மறை யொன்றன்பாற் குறிப்புவினைமுற்று. ‘போலா,’ என்ற பாடம் நச்சினார்க்கினியர் கையாண்டுள்ளது. (3) தலைமகனைத் தோழி இரவுக்குறி நயப்பித்ததுஏன லிடத்திட்ட வீர்மணிகொண் டெல்லிடைக் கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும் வானுயர் வெற்பன் வருவான்கொ லென்றோழி மேனி பசப்புக் கெட. (பத.) கானவர் மக்கள் - குறவர்களின் புதல்வர்கள், ஏனல் - தினைப்புனத்தின், இடத்து - பக்கத்தே, இட்ட - (புனம் உழுங்காலத்துத்துப்) போகட்ட, ஈர்மணி - குளிர்ந்த மாணிக்கமாகிய மணிகளை, எல் இடை - இராக்காலத்தே, கனல் என கொண்டு - நெருப்பென நினைத்து, கை காய்த்தும் - கைகளை வாட்டிக் குளிர்காயும்படியான, வான் உயர் - விண் வெளியிலே உயர்ந்து காணும்படியான, வெற்பன் - மலைநாட்டுத் தலைவன், என்தோழி - என்னுடைய தோழியாகிய தலைமகளின், மேனி - உடலிற் (காணும்), பசப்பு - பசலை நிறமானது, கெட - கெடும்படி, வருவான் கொல் - (இரவுக்குறிக்கண்) வந்து அருள்புரிவானோ என்னவோ அறியேன் (என்று தோழி தலைமகனுக்குக் கேட்கும் படி கூறிக்கொண்டாள்.) (ப-ரை.)ஏனலிடத்திட்ட குளிர்ந்த மணிகளைக் கொண்டு இரவின்கட் குறவர்மக்கள் தங்குளிர் நீங்கக் காயும் வானின் கண்ணே யுயர்ந்த வெற்பன் ஈங்கு வருவான் கொல்லோ? என்னுடைய தோழி மேனியிற் பசப்புக்கெட. (விரி.) பகற்குறிக்கண்வந்து மீளும் தலைமகனை எதிர்க்கப்பட்ட தோழி, தலைமகன் இரவுக்குறிக்கண் வருதலை வேண்டிக் கூறியதாகு மிச்செய்யுள். கருப்பொருளின்கண், “எல்லிடைக் கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும்,” என்ற போக்கால் இரவுக்குறி என்பது பெற்றாம். பழைய வுரைக்கண், “ஈங்கு,” என்ற மொழிக்குமாறாக, “இரவுக்குறிக்கண்,” எனக்கோடல் நன்கு பொருந்துவதாகும். “வானின்கண்ணேயுயர்ந்த” என்பன
|