இங்கு வருவாயாயின், மாழை - அழகிய, மான் -மான்போன்ற மருண்டு நோக்குகின்ற, நோக்கியும் - பார்வையினையுடைய தலைமகளும், ஆற்றாள் - (நினக்கு வழியிடை நேரும் இடையூற்றினை யெண்ணிப்) பொறுக்க வியலாது வருந்துவள், ஊர் - இவ்வூர் மக்களும், அறி - தெரிந்துகொள்ளுதற்குக் காரணமான, கௌவை - அலராகிய பழிமொழிகளும், தரும் - பரவும். (ஆகலின் நீ நினது வருகையினைத் தவிர்த்து மணவினையினைக் கைக்கொள்வாயாக, என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.)
(ப-ரை.) யாழுங் குழலு முழவுந் தம்முள் பொருந்தியொலித்தாற்போல வீழாநின்ற அருவியையுடைய மிக்க மலைநாடனே! மதர்ப்பிணையுடைய மான் போன்ற நோக்கினையுடையாளும் ஆற்றமாட்டாள்; நீர் இரவின்கண் வருதிராயின், ஊரும் பிறரும் அறியும் அலரைத்தரும்.
(விரி.) இயைந்த + என் = இயைந்தென : அகரந்தொகுத்தல் விகாரம். வரைவு கடாதல் - மணம்புரியத் தூண்டல். இரவுக்குறி - இராக்காலத்தே தலைமகனும் தலைமகளும் எதிர்ப்பட்டுக் கூடுமிடம். இது தலைமகளின் வீட்டினையடுத்த தோப்பின்கண்ணதாம். (7) இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி சேட்படை வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின் வாங்கமை மென்றொட் குறவர் மகளிரேஞ் சோர்ந்து குருதி யொழுகமற் றிப்புறம் போந்ததி லைய! களிறு. (பத.) ஐய - பெருமானே! வேங்கை - வேங்கைமரங்கள், மலர - பூத்து நிற்க (அதனாலே), வெறிகமழ் - மணங்கமழும்படியான, தண் - குளிர்ந்த, சிலம்பின் - இம்மலைச்சாரலின்கண், வாங்கு - வளைந்துள்ள, அமை - மூங்கிலையொத்த, மெல் தோள் - மெல்லிய தோள்களையுடைய, குறவர் மகளிரேம் - குறப்பெண்களாகிய யாங்கள் (வாழும்), இப்புறம் - இப்பக்கத்தே, களிறு - ஆண்யானையானது, குருதி - உதிரம், சேர்ந்து ஒழுக - சொரிந்து வழியும்படி, போந்தது இல் - வந்ததில்லை, (ஆகலின், நீர் இங்கு, வீணே காலக்
|