கூட்டுக. அன்றிக் கார்காலத்து விளைந்த செந்தினையினையுடைய ஏனல் எனலுமாம். காமன் ஐந்தம்புகள் - முல்லை, அசோகு, நீலம், தாமரை, மாம்பூ. (8) வஞ்சமே யென்னும் வகைத்தாலோர் மாவினாய்த் தஞ்சந் தமியனாய்ச் சென்றேனென்-னெஞ்சை நலங்கொண்டார் பூங்குழலா ணன்றாயத் தன்றென் வலங்கொண்டாள் கொண்டா ளிடம். [பாங்கற்குத் தலைமகன் றலைமகளைக் கண்டவகை கூறித் தன் னாற்றாமை மிகுதி சொல்லியது] (பத.) ஓர் - ஒரு, மாவினாய் - (வேட்டையினின்றும் விடுபட்ட) விலங்கினைக் கண்டதுண்டோ? என்று வினாவ வேண்டியவனாய், தஞசம் தமியனாய் - (எனக்குப்) பற்றுக் கோடு யானேயாய், அன்று சென்றேன் - (யான் அப்புனத்தினை நாடி அந்நாட்) போயினேன், ஆயத்து - (அங்கு) மகளிர் நாப்பண் (வீற்றிருந்த,) நலம் கொண்டு ஆர் - நறுமணங்கொண்டு பொருந்திய, பூ குழலாள் - பூக்களையணிந்த கூந்தலையுடையாள், நன்று - நன்றாக, என் வலம்-என்னுடைய வெற்றித் திறமைகளை யெல்லாம், கொண்டாள் - கைப்பற்றியவளாய், என் நெஞ்சை - எனது மனத்தை, இடம் - தனக்கிடமாக, கொண்டாள் - மேற்கொண்டு விட்டாள், வஞ்சமே என்னும் - இஃது ஒரு மாயமே என்று சொல்லப்படும், வகைத்து - தன்மைத்தாகும்! (என்று தலைவன் தோழனிடங் கூறினான்.) (ப-ரை.) மாயமே யென்று சொல்லப்படுந் தன்மைத்தால்! ஒரு மாவினை வினாவி யான் நினைவினை நீங்கித் தனியே எளியேனாய்ச் சென்றேன்: சென்றவிடத்து நலங்கொண்டு நிறைந்த பூங்குழலை யுடையாள் மிகவுந் தன்னாயத்தின்கண் அன்று என் வென்றியை யெல்லாங்கொண்டு என்னேஞ்சத்தைத் தனக்கிடமாய்க் கொண்டாள். (விரி.) பாங்கன் - தோழன். இது பாங்கற் கூட்டத்தின்பாற்படும். ஆல் - அசைநிலை. (9)
|