என்றமையின் வெள்ளாடை யென்பது பெற்றாம் என்னை? மாட்சிமையாகிய தூய்மை வெண்மைக்கண்ண தாகலின் என்க. மா - பெருமை, கருமை. மால்நீலம் - பெரிய நீலமணி யெனவுமாம். (6) கறிவளர்பூஞ் சாரற் கைந்நாகம் பார்த்து நெறிவளர் நீள்வேங்கை கொட்கு - முறிவளர் நன்மலை நாட! இரவரின் வாழாளா னன்மலை நாடன் மகள். [இதுவுமது] (பத.) முறி - (பலவகையான) தளிர்கள், வளர் - தளிர்த்துக்காணும், நல்மலை நாட - நல்ல மலைநாட்டிற்குரிய தலைவனே! கறி - மிளகு கொடிகள், வளர் - படருகின்ற, பூ சாரல் - அழகிய மலைப் பக்கத்தினிடத்தே, கை நாகம் - துதிக்கையினையுடைய யானைகளை, பார்த்து - எதிர்பார்த்துக்கொண்டு, நெறி - வழியின்கண், வளர் நீள் வேங்கை - பதினாறடிவரை வளர்ந்து நீண்ட பெரும் புலிகள், கொட்கும் - திரிதரும்படியான, இர - இரவின் கண், வரின் - நீ வருவாயானால், நல் மலை நாடன் மகள் - நல்ல மலைநாடிற்குரிய தலைவனின் மகள், வாழாள் - பொறுக்கமாட்டாள். (என்று தோழி தலைவனிடங் கூறினாள்) (ப-ரை.) மிளகு படர்கின்ற பூஞ்சாரலின்கட் கையையுடைய நாகங்களைப் பார்த்து வழயின்கண் வளர்கின்ற பெரும்புலிகள் திரிதரும் இரவின்கண் நீ வரின், தளிர் வளர்கின்ற நன்மலை நாட! நன்மலைநாடன் மகள் வாழாள்.
(விரி.) ‘இரா’ என்ற பெயர்ச் சொல், ‘இர’, எனக் குறியதன் கீழாக் குறுகி வரலாயிற்று. “வளர் நீள் வேங்கை, 'என்றமையின் ‘பதினாறடி,’ என்பது பெற்றாம். ஆல் - அசைநிலை. (7) அவட்காயி னைவனங் காவ லமைந்த திவட்காயிற் செந்தினைகா ரேன - லிவட்காயினெண்ணுளவாலைந்திரண்
|