பக்கம் எண் :

61

மறுத்து உரைக்கும் - மறுத்துச் சொல்லிச் செல்கின்ற, சேவகனும் வீரனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், புரிந்து - விரும்பி, போற்றற்கு - காத்தற்கு, அரியார் - அருமையானவ ராவர்; (எ-று.)

(க-ரை.) மழைக்காலத்தில் வந்த விருந்தினரும், காம மயக்கமில்லாத வேசையும், வெற்றியையே சிறப்பாகக் கருதும் வீரனும் பாதுகாத்தற்கு அரியவராவர்.

பிறிது : பிற என்னும் இடைச்சொல் லடியாகப் பிறந்த பெயர். சேவகன் : சேவகம் என்னும் பண்படியாகப் பிறந்த பெயர்.

(76)

 77. கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை
நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் - தெள்ளி
வடுவான வாராமல் காத்தலிம் மூன்றும்
குடிமா சிலர்க்கே யுள.

(இ-ள்.) கயவரை - கீழ்மக்களை, கையிகந்து - கைவிட்டு (சேராமல்,) வாழ்தல் - வாழ்தலும்; நயவரை - நீதியுடையவரை, நட்டு - நட்புச் செய்து, நள் இருளும் - நடு இரவிலும், கைவிடா - கைவிடாமல், ஒழுகல் - (அவருக்கு இணங்க) நடத்தலும்; தெள்ளி - ஆராய்ந்து, வடுவான- தனக்குப் பழிப்பான காரியங்கள், வாராமல் - வரவொட்டாமல், காத்தல் - காத்துக் கொள்ளுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், குடி - குடிப்பிறப்பிலே, மாசு இலார்க்கே - குற்றம் இல்லாதவர்க்கே, உள - உண்டாகும்; (எ-று)

(க-ரை.) கீழ்மக்கள் கூட்டுறவை விட்டிருப்பதும், மேன் மக்களை எப்பொழுதும் பிரியாதிருப்பதும், தமக்குப் பழி வராமற் காப்பதும் நல்லோர்க்கு உரியன என்பது.

கயவர் : கய என்னும் பண்படியாகப் பிறந்த பெயர். நயம் : நீதி. நள் - நடுக்கம்; இப் பொருளில் நள்ளிரா அச்சத்தைத்தரும் நடு இரா எனக் கொள்க. இருள் : பண்பாகுபெயர். உம் : உயர்வு சிறப்பு. வடுவான : பலவின்பாற் பெயர்.

(77)

 78. தூய்மை யுடைமை துணிவாம் தொழிலகற்றும்
வாய்மை யுடைமை வனப்பாகும் - தீமை
மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும்
தவத்தில் தருக்கினார் கோள்.