பக்கம் எண் :

35

(ப-ரை.) தன் போற்றாவழி - தன்மேல் அன்புள்ளவனாய்த் தன்னை ஒருவன் பாதுகாவாத விடத்து, புலவி - பிணக்குதல், நல்கூர்ந்தன்று - வறுமையுடையதாம்.

அன்புடையார்மேல் பிணக்கங்கொண்டால் அவர் பரிகாரம் செய்வர் : அன்பிலார்மேல் கொண்டால் அவர் பரிகாரம் செய்யார். ஆதலால் அப்பிணக்கு ஒருவருக்குக் கேட்டை உண்டாக்கும்.

அன்புடையாரிடம் கொண்ட புலவியால் இன்பம் சிறக்கும்; அன்பிலாரிடம் அதனால் இன்பம் சிறவாது. "நீரும் நிழல தினிதே புலவியும், வீழுநர் கண்ணே இனிது" (திருக்குறள்) என்று கொள்வதுமாம்.

6. முதிர்வுடை யோன்மேனி யணிநல்கூர்ந்த தன்று.

(ப-பொ.) மூத்த உடம்பினை யுடையான் அணியுமணி வறுமையுறும்.

(ப-ரை.) முதிர்வு உடையோன் - கிழப்பருவமடைந்தவன், மேனி அணி - உடம்பில் அணியும், ஆபரணம், நல்கூர்ந்தன்று - அழகு செய்யாது.

யௌவனர் அணியும் ஆபரணம் செய்கை யழகைத் தந்து சிறக்கும் : வயோதிகர் அணியும் ஆபரணம், சிறவாமல் விகாரத்தை உண்டாக்கும்.

7. சொற்செல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று.

(ப-பொ.) தன்சொல் செல்லாவிடத்துச் சொல்லிய சொல் வறுமையுறும்.

(ப.ரை.) சொல் - தன்சொல், செல்லாவழி - செல்லாத விடத்து, சொலவு - ஒன்றைச் சொல்லுதல், நல்கூர்ந்தன்று - பயனற்றதாம்.

சொற் செல்லாவழி - தன்சொல்லை ஏற்பாரில்லாத விடத்து. சொலவு - (என்பதில் அசாரியை) தொழிற்பெயர்.

தன்வார்த்தையை மதியாதவரிடம் சொல்லிக்கொண்ட குறை பயன்படாது என்பதாம்.

8. அகம்வறி யோனண்ண னல்கூர்ந் தன்று.

(ப-பொ.) மனத்தில் நன்மையின்றி வறியோ னொருவனைச் சென்று நண்ணுதல் வறுமையுறும்.