தொடக்கம் | ||
இனியவை நாற்பது பாடல் தொகுப்பு 1 முதல் 5 வரை
|
||
1. | பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே; நல் சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே; முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே, தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. |
உரை |
2. | உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால், மனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின், நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல் தலையாகத்தான் இனிது நன்கு. |
உரை |
3. | ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே; நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே; ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்கு இனிதே, தேரின், கோள் நட்புத் திசைக்கு. |
உரை |
4. | யானையுடைப் படை காண்டல் மிக இனிதே; ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே; கான் யாற்று அடை கரை ஊர் இனிது; ஆங்கு இனிதே, மானம் உடையார் மதிப்பு. |
உரை |
5. | கொல்லாமை முன் இனிது; கோல் கோடி, மா ராயன், செய்யாமை முன் இனிது; செங்கோலன் ஆகுதல், எய்தும் திறத்தால், இனிது என்ப; யார் மாட்டும் பொல்லாங்கு உரையாமை நன்கு. |
உரை |