இனியவை நாற்பது பாடல் தொகுப்பு 6 முதல் 10 வரை
 
6. ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே;
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே;
வாய்ப்பு உடையராகி, வலவைகள் அல்லாரைக்
காப்பு அடையக் கோடல் இனிது.
உரை
   
7. அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே;
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே;
தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,
கொண்டு அடையான் ஆகல் இனிது.
உரை
   
8. ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே;
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெஞ்சமத்துக்
கார் வரைபோல் யானைக் கதம் காண்டல் முன் இனிதே;
ஆர்வம் உடையவர் ஆற்றவும் நல்லவை,
பேதுறார், கேட்டல் இனிது.
உரை
   
9. தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே;
அம் கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு இனிதே;
பங்கம் இல் செய்கையர் ஆகி, பரிந்து, யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது.
உரை
   
10. கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே;
நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே;
மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
எனை மாண்பும் தான் இனிது நன்கு.
உரை