தொடக்கம் | ||
இனியவை நாற்பது பாடல் தொகுப்பு 11 முதல் 15 வரை
|
||
11. | அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே; குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே; உயிர் சென்று தாம் படினும், உண்ணார் கைத்து உண்ணாப் பெருமைபோல் பீடு உடையது இல். |
உரை |
12. | குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே; கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே; மயரிகள் அல்லராய், மாண்புடையார்ச் சேரும் திருவும், தீர்வு இன்றேல் இனிது. |
உரை |
13. | மானம் அழிந்தபின், வாழாமை முன் இனிதே; தானம் அழியாமைத் தான் அடங்கி, வாழ்வு இனிதே; ஊனம் ஒன்று இன்றி, உயர்ந்த பொருள் உடைமை மானிடவர்க்கு எல்லாம் இனிது. |
உரை |
14. | குழவி தளர் நடை காண்டல் இனிதே; அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே; வினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து, மனன் அஞ்சான் ஆகல் இனிது. |
உரை |
15. | பிறன் மனைப் பின் நோக்காப் பீடு இனிது ஆற்ற; வறன் உழக்கும் பைங் கூழ்க்கு வான் சோர்வு இனிதே; மற மன்னர் தம் கடையுள், மா மலைபோல் யானை மத முழக்கம் கேட்டல் இனிது. |
உரை |