தொடக்கம் | ||
இனியவை நாற்பது பாடல் தொகுப்பு 16 முதல் 20 வரை
|
||
16. | கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே; மிக்காரைச் சேர்தல் மிக மாண முன் இனிதே; எள்துணையானும் இரவாது தான் ஈதல் எத்துணையும் ஆற்ற இனிது. |
உரை |
17. | நட்டார்க்கு நல்ல செயல் இனிது; எத்துணையும் ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே; பற்பல தானியத்ததாகி, பலர் உடையும் மெய்த் துணையும் சேரல் இனிது. |
உரை |
18. | மன்றில் முதுமக்கள் வாழும் பதி இனிதே; தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே; எஞ்சா விழுச் சீர் இரு முதுமக்களைக் கண்டு எழுதல் காலை இனிது. |
உரை |
19. | நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே; பட்டாங்கு பேணிப் பணிந்து ஒழுகல் முன் இனிதே; முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால், மற்றுஅது தக்குழி ஈதல் இனிது. |
உரை |
20. | சலவரைச் சாரா விடுதல் இனிதே; புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே; மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது. |
உரை |