இனியவை நாற்பது பாடல் தொகுப்பு 21 முதல் 25 வரை
 
21. பிறன்கைப் பொருள் வௌவான் வாழ்தல் இனிதே;
அறம் புரிந்து, அல்லவை நீக்கல் இனிதே;
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறம் தெரிந்து வாழ்தல் இனிது.
உரை
   
22. வருவாய் அறிந்து வழங்கல் இனிதே;
ஒருவர் பாங்கு ஆகாத ஊக்கம் இனிதே;
பெரு வகைத்துஆயினும்; பெட்டவை செய்யார்,
திரிபு இன்றி வாழ்தல் இனிது.
உரை
   
23. காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே;
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே
பாவமும் அஞ்சாராய், பற்றும் தொழில் மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது.
உரை
   
24. வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே;
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே;
இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது.
உரை
   
25. ஐ வாய வேட்கை அவா அடக்கல் முன் இனிதே;
கைவாய்ப் பொருள் பெறினும், கல்லார்கண் தீர்வு இனிதே;
நில்லாத காட்சி நிறை இல் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.
உரை