தொடக்கம் | ||
இனியவை நாற்பது பாடல் தொகுப்பு 26 முதல் 30 வரை
|
||
26. | நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே; உட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே; எத் திறத்தானும் இயைவ கரவாத பற்றினில் பாங்கு இனியது இல். |
உரை |
27. | தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே; மானம் பட வரின், வாழாமை முன் இனிதே; ஊனம் கொண்டாடார், உறுதி உடையவை கோள் முறையால் கோடல் இனிது. |
உரை |
28. | ஆற்றானை, ‘ஆற்று!’ என்று அலையாமை முன் இனிதே; கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே; ஆக்கம் அழியினும், அல்லவை கூறாத தேர்ச்சியில் தேர்வு இனியது இல். |
உரை |
29. | கயவரைக் கை இகந்து வாழ்தல் இனிதே; உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே; ‘எளியர், இவர்! என்று இகழ்ந்து உரையாராகி, ஒளி பட வாழ்தல் இனிது. |
உரை |
30. | நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே; மன்றில் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே; ‘அன்று அறிவார் யார்?’ என்று அடைக்கலம் வௌவாத நன்றியின், நன்கு இனியது இல். |
உரை |