தொடக்கம் | ||
இனியவை நாற்பது பாடல் தொகுப்பு 31 முதல் 35 வரை
|
||
31. | அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே; கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே; சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது. |
உரை |
32. | கற்று அறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே; பற்று அமையா வேந்தன் கீழ் வாழாமை முன் இனிதே; தெற்றெனவு இன்றித் தெளிந்தாரைத் தீங்கு ஊக்காப் பத்திமையின் பாங்கு இனியது இல். |
உரை |
33. | ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே; தானே மடிந்து இராத் தாளாண்மை முன் இனிதே; வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர் தானை தடுத்தல் இனிது. |
உரை |
34. | எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே; சொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு இனிதே; புல்லிக் கொளினும் பொருள் அல்லார்தம் கேண்மை கொள்ளா விடுதல் இனிது. |
உரை |
35. | ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியும் மாண்பு இனிதே; முன்தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே; பற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்து உற்றுப் பாங்கு அறிதல் வெற்ற வேல் வேந்தர்க்கு இனிது. |
உரை |