தொடக்கம் | ||
இனியவை நாற்பது பாடல் தொகுப்பு 36 முதல் 40 வரை
|
||
36. | அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே; செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வு இனிதே; கவ்வித் தாம் கொண்டு, தாம் கண்டது காமுற்று, வவ்வார் விடுதல் இனிது. |
உரை |
37. | இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே; கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே; தட மென் பணைத் தோள் தளிர் இயலாரை விடம் என்று உணர்தல் இனிது. |
உரை |
38. | சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே; நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே; எத் துணையும் ஆற்ற இனிதுஎன்ப, பால் படும் கற்றா உடையான் விருந்து. |
உரை |
39. | பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே; துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே; உற்ற பொலிசை கருதி, அறன் ஒரூஉம் ஒற்கம் இலாமை இனிது. |
உரை |
40. | பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே; வித்துக் குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே; பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய, கற்றலின் காழ் இனியது இல். |
உரை |