நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
மன்றில் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
‘அன்று அறிவார் யார்?’ என்று அடைக்கலம் வௌவாத
நன்றியின், நன்கு இனியது இல்.