பாட்டு முதல் குறிப்பு
6.
யானை உழலும் அணி கிளர் நீள் வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்;
ஏனலுள்,-ஐய!-வரவு மற்று என்னைகொல்?
காணினும், காய்வர் எமர்.
உரை