தொடக்கம் | ||
11. | கன்றாமை வேண்டும், கடிய; பிறர் செய்த நன்றியை நன்றாக் கொளல் வேண்டும்; என்றும் விடல் வேண்டும், தன்கண் வெகுளி; அடல்வேண்டும், ஆக்கம் சிதைக்கும் வினை. |
உரை |
12. | பல்லினான் நோய் செய்யும், பாம்பு எல்லாம்; கொல் களிறு கோட்டான் நோய் செய்யும், குறித்தாரை; ஊடி, முகத்தான் நோய் செய்வர், மகளிர்; முனிவர் தவத்தின் தருக்குவர், நோய். |
உரை |
13. | பறை நன்று, பண் அமையா யாழின்; நிறை நின்ற பெண் நன்று, பீடு இலா மாந்தரின்; பண் அழிந்து ஆர்தலின் நன்று, பசித்தல்; பசைந்தாரின் தீர்தலின் தீப் புகுதல் நன்று. |
உரை |
14. | வளப் பாத்தியுள் வளரும், வண்மை; கிளைக் குழாம் இன் சொற் குழியுள் இனிது எழூஉம்; வன் சொல், கரவு எழூஉம், கண் இல் குழியுள்; இரவு எழூஉம், இன்மைக் குழியுள் விரைந்து. |
உரை |
15. | இன்னாமை வேண்டின், இரவு எழுக! இந் நிலத்து மன்னுதல் வேண்டின், இசை நடுக! தன்னொடு செல்வது வேண்டின், அறம் செய்க! வெல்வது வேண்டின், வெகுளி விடல்! |
உரை |
16. | கடற் குட்டம் போழ்வர், கலவர்; படைக் குட்டம் பாய்மா உடையான் உடைக்கிற்கும்; தோம் இல் தவக் குட்டம் தன்னுடையான் நீந்தும்; அவைக் குட்டம் கற்றான் கடந்துவிடும். |
உரை |
17. | பொய்த்தல் இறுவாய, நட்புக்கள்; மெய்த்தாக மூத்தல் இறுவாய்த்து, இள நலம்; தூக்கு இல் மிகுதி இறுவாய, செல்வங்கள்; தம்தம் தகுதி இறுவாய்த்து, உயிர். |
உரை |
18. | மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர்; ஒருவன் வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல்; சினச் செவ் வேல், நாட்டு ஆக்கம் நல்லன் இவ் வேந்து என்றல்; கேட்டு ஆக்கம் கேளிர் ஒரீஇவிடல். |
உரை |
19. | பெற்றான் அதிர்ப்பின், பிணை அன்னாள்தான் அதிர்க்கும்; கற்றான் அதிர்ப்பின், பொருள் அதிர்க்கும்; பற்றிய மண் அதிர்ப்பின், மன்னவன் கோல் அதிர்க்கும்; பண் அதிர்ப்பின், பாடல் அதிர்ந்துவிடும். |
உரை |
20. | மனைக்குப் பாழ், வாணுதல் இன்மை; தான் செல்லும் திசைக்குப் பாழ், நட்டோரை இன்மை; இருந்த. அவைக்குப் பாழ், மூத்தோரை இன்மை; தனக்குப் பாழ், கற்று அறிவு இல்லா உடம்பு. |
உரை |