தொடக்கம் | ||
31. | புகை வித்தாப் பொங்கு அழல் தோன்றும்; சிறந்த நகை வித்தாத் தோன்றும், உவகை; பகை, ஒருவன் முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின், இன்னா வித்து ஆகிவிடும். |
உரை |
32. | பிணி அன்னர், பின் நோக்காப் பெண்டிர்; உலகிற்கு அணி அன்னர், அன்புடைய மக்கள்; பிணி பயிலும் புல் அன்னர், புல் அறிவின் ஆடவர்; கல் அன்னர், வல்லென்ற நெஞ்சத்தவர். |
உரை |
33. | அந்தணரின் மிக்க பிறப்பு இல்லை; என் செயினும், தாயின் சிறந்த தமர் இல்லை; யாதும் வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை; எண்ணின், இளமையோடு ஒப்பதூஉம் இல். |
உரை |
34. | இரும்பின் இரும்பு இடை போழ்ப; பெருஞ் சிறப்பின் நீர் உண்டார் நீரான் வாய் பூசுப; தேரின், அரிய அரியவற்றால் கொள்ப; பெரிய பெரியரான் எய்தப்படும். |
உரை |
35. | மறக் களி மன்னர் முன் தோன்றும்; சிறந்த அறக் களி இல்லாதார்க்கு ஈயும்முன் தோன்றும்; வியக் களி நல்கூர்ந்தார் மேற்றாம்; கயக் களி ஊரில் பிளிற்றிவிடும். |
உரை |
36. | மையால் தளிர்க்கும், மலர்க்கண்கள்; மால் இருள், நெய்யால் தளிர்க்கும், நிமிர் சுடர்; பெய்ய முழங்கத் தளிர்க்கும், குருகிலை; நட்டார் வழங்கத் தளிர்க்குமாம், மேல். |
உரை |
37. | நகை இனிது, நட்டார் நடுவண்; பொருளின் தொகை இனிது, தொட்டு வழங்கின்; தகை உடைய பெண் இனிது, பேணி வழிபடின்; பண் இனிது, பாடல் உணர்வாரகத்து. |
உரை |
38. | கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல்; எஞ் ஞான்றும் இரப்பவர்க்குச் செல்சார் ஒன்று ஈவோர்; பரப்பு அமைந்த தானைக்குச் செல்சார் தறுகண்மை; ஊன் உண்டல் செய்யாமை, செல்சார் உயிர்க்கு. |
உரை |
39. | கண்டதே செய்பவாம், கம்மியர்; உண்டு எனக் கேட்டதே செய்ப, புலன் ஆள்வார்; வேட்ட இனியவே செய்ப, அமைந்தார்; முனியாதார் முன்னியவே செய்யும், திரு. |
உரை |
40. | திருவும் திணை வகையான் நில்லா; பெரு வலிக் கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது; ஆற்ற மறைக்க மறையாதாம், காமம்; முறையும் இறை வகையான் நின்றுவிடும். |
உரை |