141. அற்றாக நோக்கி அறத்திற்கு அருள் உடைமை
முற்ற அறிந்தார் முதல் அறிந்தார்; தெற்ற
முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்-
முயல் விட்டுக் காக்கை தினல்.
உரை
   
142. நாணார், பரியார், நயன் இல செய்து ஒழுகும்
பேணா அறிவு இலா மாக்களைப் பேணி,
ஒழுக்கி, அவரோடு உடனுறைசெய்தல்-
புழுப் பெய்து புண் பொதியுமாறு.
உரை
   
143. பரந்தவர் கொள்கைமேல், பல் ஆறும் ஓடார்,
நிரம்பிய காட்சி நினைந்து அறிந்து கொள்க!
வரம்பு இல் பெருமை தருமே;-பிரம்பூரி
என்றும் பதக்கு ஏழ் வரும்.
உரை
   
144. தமர் அல்லவரைத் தலையளித்தக்கண்ணும்,
அமராக் குறிப்பு அவர்க்கு ஆகாதே தோன்றும்;-
சுவர் நிலம் செய்து அமைத்துக் கூட்டியக்கண்ணும்,
உவர் நிலம் உட்கொதிக்குமாறு.
உரை
   
145. ஒல்லாது ஒன்று இன்றி, உடையார் கருமங்கள்
நல்லவாய் நாடி நடக்குமாம்; இல்லார்க்கு
இடரா இயலும்;-இலங்கு நீர்ச் சேர்ப்ப!-
கடலுள்ளும் காண்பவே, நன்கு.
உரை
   
146. கடுப்பத் தலைக் கீறி, காலும் இழந்து,
நடைத் தாரா என்பதூஉம் பட்டு, முடத்தொடு
பேர் பிறிதாகப் பெறுதலால், போகாரே-
நீர் குறிதாகப் புகல்.
உரை
   
147. பொருள் அல்லார் கூறிய பொய்க் குறளை வேந்தன்
தெருளும் திறம் தெரிதல் அல்லால், வெருள எழுந்து,
ஆடுபவரோடே ஆடார், உணர்வு உடையார்-
ஆடு மணைப் பொய்க் காலே போன்று.
உரை
   
148. ‘முன் நலிந்து, ஆற்ற முரண் கொண்டு எழுந்தாரைப்
பின் நலிதும்’ என்று உரைத்தல் பேதைமையே; பின் நின்று,-
காம்பு அன்ன தோளி!-கலங்கக் கடித்து ஓடும்
பாம்பு பல் கொள்வாரோ இல்.
உரை
   
149. நெறியால் உணராது, நீர்மையும் இன்றி,
சிறியார், ‘எளியரால்!’ என்று, பெரியாரைத்
தங்கள் நேர் வைத்து, தகவு அல்ல கூறுதல்-
திங்களை நாய் குரைத்தற்று.
உரை
   
150. ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்கு ஆயினும்,
வீற்று வழி அல்லால், வேண்டினும், கைகூடா;
தேற்றார் சிறியர் எனல் வேண்டா;-நோற்றார்க்குச்
சோற்றுள்ளும் வீழும் கறி.
உரை