| தொடக்கம் |
|
|
|
|
| 311. | மன்னவன் ஆணைக்கீழ், மற்றையார் மீக்கூற்றம் என்ன வகையால் செயப் பெறுப?-புன்னைப் பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப!- மரத்தின் கீழ் ஆகா, மரம். | |
|
உரை
|
| |
|
|
|
|
| 312. | முன் பெரிய நல்வினை முட்டு இன்றிச் செய்யாதார், பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ? வைப்போடு இகலிப் பொருள் செய்ய எண்ணியக்கால், என் ஆம்?- முதல் இலார்க்கு ஊதியம் இல். | |
|
உரை
|
| |
|
|
|
|
| 313. | தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால், மற்றும் கண்ணோடுவர், மேன்மக்கள்;-தெற்ற நவைக்கப்படும் தன்மைத்துஆயினும், சான்றோர் அவைப்படின், சாவாது பாம்பு. | |
|
உரை
|
| |
|
|
|
|
| 314. | அடையப் பயின்றவர் சொல் ஆற்றுவராக் கேட்டால், உடையது ஒன்று இல்லாமை ஒட்டின்,-படை வென்று அடைய அமர்த்த கண் ஆயிழாய்!-அஃதால், இடையன் எறிந்த மரம். | |
|
உரை
|
| |
|
|
|
|
| 315. | ஊக்கி, உழந்து, ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை, ‘நோக்குமின்!’ என்று, இகழ்ந்து, நொவ்வியார்கை விடுதல்,- போக்கு இல் நீர் தூஉம் பொரு கழித் தண் சேர்ப்ப!- காக்கையைக் காப்பு இட்ட சோறு. | |
|
உரை
|
| |
|
|
|
|
| 316. | தொடுத்த பெரும் புலவன், சொற் குறை தீர, ‘அடுத்தர’ என்றாற்கு, ‘வாழியரோ!’ என்றான்; தொடுத்து, ‘இன்னர்’ என்னலோ வேண்டா;-கொடுப்பவர் தாம் அறிவர், தம் சீர் அளவு. | |
|
உரை
|
| |
|
|
|
|
| 317. | ‘வரை புரை வேழத்த, வன் பகை’ என்று அஞ்சி, உரையுடை மன்னருள் புக்கு, ஆங்கு அவையுள், நிரை உரைத்துப் போகாது, ஒன்று ஆற்றத் துணிக!- திரை அவித்து, ஆடார் கடல். | |
|
உரை
|
| |
|
|
|
|
| 318. | ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்ப, தாம் உடைய மாற்றார் கொடுத்திருப்ப, வள்ளன்மை; மாற்றாரை மண் பற்றிக் கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என் அரிதாம்?- பெண் பெற்றான் அஞ்சான், இழவு. | |
|
உரை
|
| |
|
|
|
|
| 319. | முடிந்ததற்கு இல்லை, முயற்சி; முடியாது ஒடிந்ததற்கு இல்லை, பெருக்கம்; வடிந்து அற வல்லதற்கு இல்லை, வருத்தம்; உலகினுள் இல்லதற்கு இல்லை, பெயர். | |
|
உரை
|
| |
|
|
|
|
| 320. | காப்பு இறந்து ஓடி, கழி பெருஞ் செல்வத்தைக் கோப் பரியான் கொள்ளின், கொடுத்து இராது என் செய்வர்? நீத்த பெரியார்க்கே ஆயினும், ஈத்தவை மேவின், பரிகாரம் இல். | |
|
உரை
|
| |
|
|