தொடக்கம் |
|
|
ஐந்திணை எழுபது (மூவாதியார்) 1. குறிஞ்சி தோழி தலைமகனை வரைவு கடாயது | |
1. | அவரை பொருந்திய பைங் குரல் ஏனல் கவரி மட மா கதூ உம் படர் சாரல் கானக நாட! மறவல், வயங்கிழைக்கு யான் இடை நின்ற புணை. | |
|
உரை
|
|
|
|
|
2. | கொல்லைப் புனத்த அகில் சுமந்து, கல் பாய்ந்து, வானின் அருவி ததும்ப, கவினிய நாடன் நயம் உடையன் என்பதனால், நீப்பினும், வாடல் மறந்தன, தோள். | |
|
உரை
|
|
|
|
|
தோழி தலைமகன் வரைவு மலிந்தமை தலைமகட்குச் சொல்லியது | |
3. | இலை அடர் தண் குளவி வேய்ந்த பொதும்பில், குலையுடைக் காந்தள், இன வண்டு இமிரும் வரையக நாடனும் வந்தான்; மற்று அன்னை அலையும் அலை போயிற்று, இன்று. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது | |
4. | மன்றப் பலவின் சுளை விளை தீம் பழம் உண்டு, உவந்து, மந்தி முலை வருட, கன்று அமர்ந்து, ஆமா சுரக்கும் அணி மலை நாடனை யாமாப் பிரிவது இலம். | |
|
உரை
|
|
|
|
|
5. | சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி, வலி ஆகி, பின்னும் பயக்கும்; மெலிவு இல் கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை நயம் திகழும் என்னும், என் நெஞ்சு. | |
|
உரை
|
|
|
|
|
புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது | |
6. | பொன் இணர் வேங்கை கமழும் நளிர் சோலை நல் மலை நாட! மறவல்; வயங்கிழைக்கு நின் அலது இல்லையால்; ஈயாயோ, கண்ணோட்டத்து இன் உயிர் தாங்கும் மருந்து? | |
|
உரை
|
|
|
|
|
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, படைத்து மொழி கிளவியால் தோழி வரைவு கடாயது | |
7. | காய்ந்தீயல், அன்னை! இவேளா தவறு இலள்;- ஓங்கிய செந் நீர் இழிதரும் கான் யாற்றுள், தேம் கலந்து வந்த அருவி குடைந்து ஆட, தாம் சிவப்பு உற்றன, கண். | |
|
உரை
|
|
|
|
|
புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது | |
8. | வெறி கமழ் தண் சுனைத் தெண்ணீர் துளும்ப, கறி வளர் தே மா நறுங் கனி வீழும் வெறி கமழ் தண் சோலை நாட! ஒன்று உண்டோ, அறிவின்கண் நின்ற மடம்? | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது | |
9. | மன்றத் துறுகல் கருங் கண் முசு உகளும் குன்றக நாடன் தெளித்த தெளிவினை நன்று என்று தேறித் தெளிந்தேன், தலையளி ஒன்று; மற்று ஒன்றும் அனைத்து. | |
|
உரை
|
|
|
|
|
தோழி தலைமகனைக் கண்டு வரைவு கடாயது | |
10. | பிரைசம் கொள வீழ்ந்த தீம் தேன் இறாஅல் மரையான் குழவி குளம்பின் துகைக்கும் வரையக நாட! வரையாய் வரின், எம் நிரைதொடி வாழ்தல் இலள். | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் கேட்ப, இயற்பட மொழிந்தது | |
11. | கேழல் உழுத கரி புனக் கொல்லையுள், வாழை முது காய் கடுவன் புதைத்து அயரும் தாழ் அருவி நாடன் தெளி கொடுத்தான், என் தோழி நேர்வளை நெஞ்சு ஊன்று கோல். | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது | |
12. | பெருங்கை இருங் களிறு ஐவனம் மாந்தி, கருங் கால் மராம் பொழில் பாசடைத் துஞ்சும், சுரும்பு இமிர் சோலை, மலை நாடன் கேண்மை பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து. | |
|
உரை
|
|
|
|
|
வெறியாட்டு எடுத்துக்கொண்ட இடத்து, தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது | |
13. | வார் குரல் ஏனல் வளை வாய்க் கிளி கவரும், நீரால் தெளி திகழ், கான் நாடன் கேண்மையே ஆர்வத்தின் ஆர முயங்கினேன்; வேலனும் ஈர, வலித்தான், மறி. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் வரும் வழியின் ஏதத்திற்குக் கவன்ற தலைமகள் வரைவு வேட்டு, தோழிக்குச் சொல்லியது | |
14. | குறை ஒன்று உடையேன்மன்;-தோழி!-நிறை இல்லா மன்னுயிர்க்கு ஏமம் செயல் வேண்டும்; இன்னே, அரா வழங்கு நீள் சோலை நாடனை நம் இல், ‘இரா வாரல்’ என்பது உரை. | |
|
உரை
|
|
|
|