தொடக்கம் |
|
|
2. முல்லை பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது | |
15. | செங் கதிர்ச் செல்வன் சினம் கரந்த போழ்தினால், பைங் கொடி முல்லை மணம் கமழ, வண்டு இமிர, காரோடு அலமரும் கார் வானம் காண்தொறும் நீரோடு அலமரும், கண். | |
|
உரை
|
|
|
|
|
16. | தட மென் பணைத் தோளி! நீத்தாரோ வாரார்; மட நடை மஞ்ஞை அகவ, கடல் முகந்து, மின்னோடு வந்தது எழில் வானம்; வந்து, என்னை, ‘என் ஆதி?’ என்பாரும் இல். | |
|
உரை
|
|
|
|
|
17. | தண் நறுங் கோடல் துடுப்பு எடுப்ப, கார் எதிரி விண் உயர் வானத்து உரும் உரற்ற, திண்ணிதின் புல்லுநர் இல்லார் நடுங்க, சிறு மாலை, கொல்லுநர் போல, வரும். | |
|
உரை
|
|
|
|
|
18. | கதழ் உறை வானம் சிதற, இதழகத்துத் தாது இணர்க் கொன்றை எரி வளர்ப்ப, பாஅய் இடிப்பது போலும் எழில் வானம் நோக்கி, துடிப்பது போலும், உயிர். | |
|
உரை
|
|
|
|
|
19. | ஆலி விருப்புற்று அகவி, புறவு எல்லாம் பீலி பரப்பி, மயில் ஆல, சூலி விரிகுவது போலும் இக் கார் அதிர, ஆவி உருகுவது போலும், எனக்கு. | |
|
உரை
|
|
|
|
|
20. | இனத்த அருங் கலை பொங்க, புனத்த கொடி மயங்கு முல்லை தளிர்ப்ப, இடி மயங்கி, யானும் அவரும் வருந்த, சிறு மாலை- தானும் புயலும் வரும். | |
|
உரை
|
|
|
|
|
21. | காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன், கார்க் கொடி முல்லை எயிறு ஈன, காரோடு உடன்பட்டு வந்து அலைக்கும் மாலைக்கோ, எம்மின் மடம் பட்டு வாழ்கிற்பார் இல். | |
|
உரை
|
|
|
|
|
22. | கொன்றைக் குழல் ஊதிக் கோவலர் பின் நிரைத்து, கன்று அமர் ஆயம் புகுதர, இன்று வழங்கிய வந்தன்று, மாலை; யாம் காண, முழங்கி, வில் கோலிற்று, வான். | |
|
உரை
|
|
|
|
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் சொல்லியது | |
23. | தேரைத் தழங்குரல் தார் மணி வாய் அதிர்ப்ப, ஆர் கலி வானம் பெயல் தொடங்கி, கார் கொள, இன்று ஆற்ற வாரா விடுவார்கொல், காதலர்? ஒன்றாலும் நில்லா, வளை. | |
|
உரை
|
|
|
|
|
24. | கல் ஏர் புறவில் கவினி, புதல்மிசை முல்லை தளவொடு போது அவிழ, எல்லி அலைவு அற்று விட்டன்று வானமும்; உண்கண், முலை வற்று விட்டன்று, நீர். | |
|
உரை
|
|
|
|
|
[இது முதல் துறைக்குறிப்புகள் கிடைக்கவில்லை] | |
|
உரை
|
|
|
|
|
|
உரை
|
|
|
|
|
27. | கார்ப்புடைப் பாண்டில் கமழ, புறவு எல்லாம் ஆர்ப்பொடு இன வண்டு இமிர்ந்து ஆட, நீர்த்து அன்றி ஒன்றாது அலைக்கும் சிறு மாலை, மால் உழந்து நின்றாக நின்றது நீர். | |
|
உரை
|
|
|
|
|
28. | குருந்து அலை வான் படலை சூடிச் சுரும்பு ஆர்ப்ப, ஆயன் புகுதரும் போழ்தினான், ஆயிழாய்! பின்னொடு நின்று ..... படு மழை கொ....ல் என்னொடு பட்ட வகை. | |
|
உரை
|
|
|
|