தொடக்கம் |
|
|
57. | ஒழுகு திரைக் கரை வான் குருகின் தூவி உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனைப் பேதையான் என்று உணரும், நெஞ்சம்; இனிது உண்மை ஊதியம் அன்றோ உயிர்க்கு? | |
|
உரை
|
|
|
|
|
58. | என்னைகொல்? தோழி! அவர்கண்ணும் நன்கு இல்லை; அன்னை முகனும் அது ஆகும்; பொன் அலர் புன்னை அம் பூங் கானற் சேர்ப்பனை, ‘தக்க தேர்; நின் அல்லது இல்’ என்று உரை. | |
|
உரை
|
|
|
|
|
59. | இடு மணல் எக்கர் அகன் கானல் சேர்ப்பன் கடு மான் மணி அரவம் என்று, கொடுங்குழை புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தாள்-'சிறு குடியர் உள் அரவம் நாணுவர்’ என்று. | |
|
உரை
|
|
|
|
|
60. | மணி நிற நெய்தல் இருங் கழிச் சேர்ப்பன் அணி நலம் உண்டு அகன்றான்; என்கொல், எம்போல் தணி மணல் எக்கர்மேல் ஓதம் பெயர, துணி முந்நீர் துஞ்சாதது? | |
|
உரை
|
|
|
|
|
61. | கண் திரள் முத்தம் பயக்கும் இரு முந்நீர்ப் பண்டம் கொள் நாவாய் வழங்கும் துறைவனை முண்டகக் கானலுள் கண்டேன் எனத் தெளிந்தேன், நின்ற உணர்வு இலாதேன். | |
|
உரை
|
|
|
|
|
62. | ‘அடும்பு இவர் எக்கர் அலவன் வழங்கும் கொடுங் கழிச் சேர்ப்பன் அருளான்’ எனத் தெளிந்து, கள்ள மனத்தான் அயல் நெறிச் செல்லும்கொல், நல் வளை சோர, நடந்து? | |
|
உரை
|
|
|
|
|
63. | கள் நறு நெய்தல் கமழும் கொடுங் கழித் தண்ணம் துறைவனோ தன் இலன்; ஆயிழாய்! வள்நகைப்பட்டதனை ஆண்மை எனக் கருதி, பண் அமைத் தேர்மேல் வரும். | |
|
உரை
|
|
|
|
|
64. | தெண் நீர் இருங் கழி, வேண்டும் இரை மாந்தி, பெண்ணைமேல் சேக்கும் வணர் வாய்ப் புணர் அன்றில்! தண்ணம் துறைவற்கு உரையாய், ‘மடமொழி வண்ணம் தா’ என்று தொடுத்து. | |
|
உரை
|
|
|
|
|
65. | எறி சுறாக் குப்பை இனம் கலக்கத் தாக்கும் எறி திரைச் சேர்ப்பன் கொடுமை அறியாகொல்- கானகம் நண்ணி அருள் அற்றிடக் கண்டும், கானலுள் வாழும் குருகு? | |
|
உரை
|
|
|
|
|
66. | நுண் ஞாண் வலையின் பரதவர் போத்தந்த பல் மீன் உணங்கல் கவரும் துறைவனைக் கண்ணினால் காண அமையும்கொல்? ‘என் தோழி வண்ணம் தா’ என்கம், தொடுத்து. | |
|
உரை
|
|
|
|
|
67. | இவர் திரை நீக்கியிட்டு, எக்கர் மணல்மேல் கவர் கால் அலவன் தன பெடையோடு, தவழும் இருங் கழிச் சேர்ப்ப! என் தோழி- படர் பசலை பாயின்று-தோள். | |
|
உரை
|
|
|
|
|
68. | சிறு மீன் கவுள் கொண்ட செந் தூவி நாராய்! இறு மென் குரல நின் பிள்ளைகட்கே ஆகி, நெறி நீர் இருங் கழிச் சேர்ப்பன் அகன்ற நெறி அறிதி, மீன் தபு நீ. | |
|
உரை
|
|
|
|
|
|
உரை
|
|
|
|
|
|
உரை
|
|
|
|