திணைமொழி ஐம்பது
(கண்ணஞ் சேந்தனார்)
1. குறிஞ்சி
அஞ்சி அச்சுறுத்துவது
1. புகழ் மிகு சாந்து எறிந்து, புல் எரி ஊட்டி,
புகை கொடுக்கப் பெற்ற புலவோர் துகள் பொழியும்
வான் உயர் வெற்ப! இரவின் வரல் வேண்டா,
யானை உடைய சுரம்.
உரை
   
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது
2. கண முகை கை எனக் காந்தள் கவின,
‘மண முகை’ என்று எண்ணி, மந்தி கொண்டாடும்
விறல் மலை நாட! வரவு அரிதாம் கொல்லோ?
புனமும் அடங்கின காப்பு.
உரை
   
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது
3. ஓங்கல் இறு வரைமேல் காந்தள் கடி கவின,
பாம்பு என ஓடி, உரும் இடிப்ப, கண்டு இரங்கும்
பூங் குன்ற நாடன் புணர்ந்த அந் நாள் போலா,
ஈங்கு நெகிழ்ந்த, வளை.
உரை
   
தலைமகனைத் தோழி இரவுக்குறி நயப்பித்தது
4. ஏனம் இடந்திட்ட ஈர் மணி கொண்டு, எல்லிடை,
கானவர் மக்கள் கனல் எனக் கை காய்த்தும்
வான் உயர் வெற்பன் வருவான்கொல், என் தோழி
மேனி பசப்புக் கெட?
உரை
   
பின்னின்ற தலைமகனைக் காவல் மிகுதி சொல்லிச் சேட்படுத்தது
5. விரை கமழ் சாரல் விளை புனம் காப்பார்
வரையிடை வாரன்மின்;-ஐய!-உரை கடியர்;
வில்லினர்; வேலர்; விரைந்து செல் அம்பினர்;
கல்லிடை வாழ்நர் எமர்.
உரை
   
6. யானை உழலும் அணி கிளர் நீள் வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்;
ஏனலுள்,-ஐய!-வரவு மற்று என்னைகொல்?
காணினும், காய்வர் எமர்.
உரை
   
இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது
7. யாழும் குழலும் முழவும் இயைந்தனெ
வீழும் அருவி விறல் மலை நல் நாட!
மாழை மான் நோக்கியும் ஆற்றாள்; இர வரின்,
ஊர் அறி கௌவை தரும்.
உரை
   
(சேட்) படை
8. வேங்கை மலர, வெறி கமழ் தண் சிலம்பின்
வாங்கு அமை மென் தோள் குறவர் மகளிரேம்;
சோர்ந்து குருதி ஒழுக, மற்று இப் புறம்
போந்தது இல்,-ஐய!-களிறு.
உரை
   
தோழி தலைமகனை இரவுக்குறி நயப்பித்தது
9. பிணி நிறம் தீர்ந்து, பெரும் பணைத்தோள் வீங்க,
மணி மலை நாடன் வருவான்கொல்,-தோழி!-
கணி நிற வேங்கை மலர்ந்து, வண்டு ஆர்க்கும்
மணி நிற மாலைப் பொழுது?
உரை
   
தலைமகன் சிறைப்புறத்தானாக, படைத்து மொழி கிளவியால்,
தோழி வரைவு கடாயது
10. பலவின் பழம் பெற்ற பைங் கண் கடுவன்,
‘எல!’ என்று இணை பயிரும் ஏகல் சூழ் வெற்பன்
புலவும்கொல்?-தோழி!-புணர்வு அறிந்து, அன்னை
செலவும் கடிந்தாள், புனத்து.
உரை