தொடக்கம் |
|
|
3. முல்லை தலைமகன் வரைவு மலிந்தது தோழி தலைமகட்குச் சொல்லியது | |
21. | அஞ்சனம் காயா மலர, குருகிலை ஒண் தொடி நல்லார் முறுவல் கவின் கொள, தண் கமழ் கோடல் துடுப்பு ஈன, காதலர் வந்தார்; திகழ்க, நின் தோள்! | |
|
உரை
|
|
|
|
|
தோழி பருவம் காட்டி, தலைமகளை வற்புறுத்தியது | |
22. | மென் முலைமேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல்?- நல் நுதல் மாதராய்!-ஈதோ நமர் வருவர்; பல் நிற முல்லை அரும்ப, பருவம் செய்து, இன் நிறம் கொண்டது, இக் கார். | |
|
உரை
|
|
|
|
|
23. | சென்றார் வருவர்; செறிதொடீஇ! கார் இஃதோ, வெஞ் சின வேந்தர் முரசின் இடித்து உரறி, தண் கடல் நீத்தம் பருகி, தலைசிறந்து, இன்றையின் நாளை மிகும். | |
|
உரை
|
|
|
|
|
24. | செஞ் சுணங்கின் மென் முலையாய்! சேர் பசலை தீர்; இஃதோ வஞ்சினம் சொல்லி வலித்தார் வரு குறியால்; வெஞ் சினம் பொங்கி, இடித்து உரறிக் கார் வானம் தண் பெயல் கான்ற, புறவு. | |
|
உரை
|
|
|
|
|
25. | கரு இயல் கார் மழை கால் கலந்து ஏந்த, உருகு மட மான் பிணையோடு உகளும்;- உருவ முலையாய்!-நம் காதலர் இன்னே வருவர்; வலிக்கும் பொழுது. | |
|
உரை
|
|
|
|
|
26. | இருங் கடல் மாந்திய ஏர் கொள் எழிலி கருங் கொடி முல்லை கவின முழங்கி, பெரும் பெயல் தாழ, பெயர் குறி செய்தார்; பொருந்த நமக்கு உரைத்த போழ்து. | |
|
உரை
|
|
|
|
|
27. | ஆயர் இனம் பெயர்த்து, ஆம்பல் அடைதர, பாய முழங்கி, படு கடலுள் நீர் முகந்து, மா இரு ஞாலம் இருள் கூர் மருள் மாலை- சேயவர், செய்த குறி. | |
|
உரை
|
|
|
|
|
பருவம் காட்டிய தோழி வற்புறுத்தியது | |
28. | அதிர் குரல் ஏறோடு அலை கடல் மாந்தி, முதிர் மணி நாகம் அனுங்க முழங்கி, கதிர் மறை மாலை, கனை பெயல் தாழ, பிதிரும் முலைமேல், சுணங்கு. | |
|
உரை
|
|
|
|
|
29. | கோடலம் கூர் முகை கோள் அரா நேர் கருத, காடு எலாம் கார் செய்து, முல்லை அரும்பு ஈன, ஆறு எலாம் நுண் அறல் வார, அணியிழாய்! போதராய்; காண்பாம், புறவு. | |
|
உரை
|
|
|
|
|
30. | அருவி அதிர, குருகிலை பூப்ப, தெரி ஆ இனநிரை தீம் பால் பிலிற்ற,- வரி வளைத் தோளி!-வருவார் நமர்கொல்? பெரிய மலர்ந்தது இக் கார். | |
|
உரை
|
|
|
|