கழிப்பி" (23--42) என்னும் பகுதியிலும், மதுரைக் காண்டத்திலே புறஞ்சேரியிறுத்த
காதையில் "செந்திறம் புரிந்த செங்கோட்டி யாழில்......பாடற் பாணி யளைஇ" (106--13)
என்னும் பகுதி யிலும், ஆய்ச்சியர் குரவையில் "குடமுதலிட முறையா......பின்றை யைப்
பாட்டெடுப்பாள்" என்னும் பகுதியிலும், வஞ்சிக் காண்டத் திலே நடுகற்கதையில் "வணர்கோட்டுச்
சீறியாழ்.........வரு விருந்தயர்ந்து" (31--6) என்னும் பகுதியிலும் யாழ்வாசிக்கு
முறை மையும் பண்கள் தோன்றும் முறைமையும் முதலியன கூறப்பெற் றுள்ளன. பழந் தமிழிசை
மரபை அறிதற்குக் கருவியாகிய இவற் றைத் தமிழ் மக்கள் ஆராயுங் கடப்பாடுடையராவர்.
இனி, கூத்தின் பகுதியை நோக்குழி மேலே கூறியதன்றி, கடலாடுகாதையில் (39--67) கொடுகொட்டி
முதலிய பதினேராடலும், வேனிற்காதை யில் (74--108) கண்கூடுவரி முதலிய எண்வகை வரியும்,
அரங் கேற்று காதையிலும் (1--11) ஊர்காண் காதையிலும் (148--60) கூத்தியரமைதியும்
கூறப்பட்டுள்ளன.
இந்திர விழவூரெடுத்த காதை, கானல்வரி,
வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை என்னும் பகுதிகளில் முறையே மருதம், நெய்தல்,
பாலை, முல்லை, குறிஞ்சி என்னும் திணைகட்குரிய விழா, பாட்டு, கூத்து என்பவற்றில்
ஒன்றும் பலவும் வந்துள்ளன.
கானல் வரியில் உள்ள பாட்டுக்களெல்லாம்
அகப்பொருட் டுறை யமைந்தவை; மிக்க இனிமை வாய்ந்தவை; குன்றக் குரவை யிலும் சில
பாட்டுக்கள் இப்பெற்றியன. வேட்டுவ வரியிலும், காட்சிக் காதையிலும் வெட்சி, வஞ்சி,
காஞ்சி என்னும் புறத்திணை கட்குரிய துறைகள் பல வந்துள்ளன. அவற்றிற் சில தொல்காப்பி
யத்தையும், சில பன்னிருபடலத்தையும் பின்பற்றியுள்ளமை கருதற் பாலது.
இந்திரவிழவூரெடுத்த காதையாலும்,
ஊர்காண்காதையாலும் முறையே புகார், மதுரை என்னும் நகரங்களின் அமைப்பும் வாணி கப்
பெருக்கமும் செல்வச் சிறப்பும் புலனாகின்றன. பின்னதன்கண் நவமணியிலக்கணம் விரித்துரைக்கப்பெற்றுள்ளது;
அப்பகுதிக்கு உரையெழுது மிடத்து அடியார்க்கு நல்லார் பழைய நூற்பாக்களை மேற்கோள்
காட்டிச் செல்லுதலின் அக்காலத்தே தமிழின்கண் பல கலைகளும் பல்கியிருந்தமை பெற்றாம்.
வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று ஆரியமன்னர்களை வென்று
கண்ணகிக்குச் சிலை கொணர்ந்த செய்தி மிக்க பெருமித முடையது.
இவ்வாற்றான், இச்சிலப்பதிகாரமானது
ஒன்பான் சுவையும் ஒருங்கமைந்த சிறந்த காப்பியமாதலன்றி, தமிழக வரலாற்று நூல்
|