|
நறுமலர்க் கோதைநின்
நலம்பா ராட்டுநர்
மறுவின் மங்கல வணியே யன்றியும்
பிறிதணி யணியப் பெற்றதை யெவன்கொல் |
|
நறுமலர்க்
கோதை - நறிய மலரை யணிந்த கோதையே, நின் நலம் பாராட்டுநர் - நின்னைப் புனைந்து
அழகு செய்யும் மகளிர், மறுஇல் மங்கல அணியே அன்றியும் - குற்றமற்ற நினது புனையாத அழகிருக்கவும்
அஃதன்றி, பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல் - வேறு சில அணிகளை அணிந்த தனாற்
பெற்றது யாதோ ;
நலம் பாராட்டுநர் - ஒப்பனை செய்வார்,
மங்கலவணி - இயற் கையழகு ; மாங்கலிய மென்பாருமுளர். அணிய - அணிதலால்.
1"உமிழ்சுடர்க்
கலன்கள் நங்கை யுருவினை மறைப்ப தோரார்"
என்பது ஒப்பு நோக்கற்பாலது.
|
1.
கம்ப, பால.
|
|
|