முதலில் காட்டிய முறை பற்றிக் கற்பார் அறிதல் சாலுமென்னும் கருத்தினாற்போலும்.
அறன் மறன் ஆற்றல் என்பன மழை
பிணித்தாண்டாமை வடிவே லெறிந்தமை ஆரம் பூண்டமை முதலியவற்றிலும், மூதூர்ப் பண்பு மேம்படுதல்
குடி கூழின்பெருக்கம் என்பன ஊர்காண் காதை முதலியவற்றிலும், யாறு வளஞ் சுரத்தல் புறஞ்சேரியிறுத்த
காதையிலும், விண்ணவர் வரவு வஞ்சினமாலை முதலிய மூன்று காதையிலும், வரி வேட்டுவவரியிலும்,
குரவை ஆய்ச்சியர் குரவையிலும் ஒன்றித் தோன்றுவனவாம். ஆரபடி சாத்துவதி என்பன நாடகத்தின்
விலக்குறுப்புக்களில் ஒன்றாகிய விருத்தியன் வகை நான்கனுள் இரண்டாம். ஆரபடி பொருள்
பொருளாகவும், சாத்துவதி அறம் பொருளாகவும் வருவனவாகலின் அவற்றுடன் பொருந்திய ஆடல்கள்
முறையே வேட்டுவ வரியும் ஆய்ச்சியர் குரவையுமாதல் வேண்டும்.
மதுரைக் காண்டம் முற்றிற்று.
|