பக்கம் எண் :

1. குன்றக் குரவை

மூன்றாவது

வஞ்சிக் காண்டம்

1. குன்றக் குரவை


[இவ்வாறு கண்ணகி கணவனுடன் விமானமேறிச் செல்லக் கண்ட மலைவாணராகிய வேட்டுவரும் வேட்டுவித்தியரும் மிகுந்த வியப்புற்றுக் கண்ணகியைத் தம் குலதெய்வமாகக் கருதி அவள் பொருட்டுக் குரவைக்கூத்து நிகழ்த்தினர். (இதன்கண் குன்றவர் தெய்வ வழிபாட்டு முறைமையும், அகப்பொருட் சுவையமைந்தனவும் செவ்வேளின் துதியாவனவுமாகிய குரவைப் பாட்டுக்களும் காணக்கிடக்கின்றன.)]