பக்கம் எண் :


2. மனையறம்படுத்த காதை



70
திருமுலைத் தடத்திடைத் தொய்யி லன்றியும்

ஒருகாழ் முத்தமொ டுற்றதை யெவன்கொல


69
உரை
70

       திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் - அவர், முலைத்தடத்தின்மேல் தொய்யி லெழுதுத லன்றியும், ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்கொல் - தனி முத்து வடத் தைப் பூட்டுவதற்கு அதனோடு அவர்க்குண்டான உரிமை யாதோ ;

       திரு - முலைமேற் றோன்றும் வீற்றுத் தெய்வம் எனபர் ; 1"ஆமணங்கு குடியிருந் தஞ்சுணங்கு பரந்தனவே" என்றார் சிந்தா மணியிலும். தடம் - பரப்பு. காழ் - வடம். முத்தக் காழ் என மாறுக.

1. சீவக, நாமக. 142.