|
தயங்கிணர்க் கோதை
தன்னொடு தருக்கி
வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள |
|
தயங்கு
இணர்க் கோதை தன்னொடு தருக்கி - விளங்கு கின்ற பூங் கொத்துக்களாலாகிய கோதையையுடையாளோடும்
இன்பத்தில் மிக்கு, வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல் வுழி நாள் - விளங்குகின்ற
இணர்த் தாரினை யுடையோன் மகிழ்ந்து செல்லா நின்ற நாட்களில் ஒருநாள்,
தயங்கல், வயங்கல் இரண்டும் விளக்கமென்னும்
பொருளன ; இங்ஙனம் வருவனவற்றைப் பரியாயவலங்காரமென்பர் அடியார்க்கு நல்லார்.
|
|
|